செசுபுரோனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செசுபுரோனைட்டு
Cesbronite
பொதுவானாவை
வகைதாமிர-தெலூரியம் ஆக்சி உப்பு
வேதி வாய்பாடுCu3Te6+O4(OH)4
இனங்காணல்
நிறம்பச்சை
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
பிளப்பு{010} இல் குறைவு, {021} இல் நன்று
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை3
மிளிர்வுசற்று விடாப்பிடியானது
கீற்றுவண்ணம்பச்சை
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும்
ஒப்படர்த்தி4.45 (அளக்கப்பட்டது)
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
இரட்டை ஒளிவிலகல்δ = 0.149
பலதிசை வண்ணப்படிகமைதனித்துவம், பலவிதப் பச்சைகள்
2V கோணம்72o (கணக்கிடப்பட்டது)
புறவூதா ஒளிர்தல்இல்லை
கரைதிறன்HCl மற்றும் HNO3 போன்றவற்றில் கரையும். நீரில் கரையாது.
மேற்கோள்கள்[1][2][3][4][1]

செசுபுரோனைட்டு (Cesbronite) என்பது Cu3Te6+O4(OH)4 (IMA 17-C) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். தாமிர-தெலூரியம் ஆக்சி உப்பு என்று இது வகைப்படுத்தப்படுகிறது. பச்சை நிறத்தில் காணப்படும் செசுபுரோனைட்டு கனிமத்தின் படிகங்கள் செஞ்சாய்சதுர இரட்டைக்கூர்நுனி வடிவத்தில் படிகமாகியுள்ளன. செசுபுரோனைட்டு கனிமத்தின் மோவின் அளவுகோல் கடினத்தன்மை மதிப்பு 3 என மதிப்பிடப்பட்டுள்ளது [2]. 1938 ஆம் ஆண்டில் பிறந்த பிரெஞ்சு கனிமவியலாளரான பேபியன் செசுபுரோன் நினைவாக கனிமத்திற்கு இப் பெயரிடப்பட்டது [3].

தோற்றம்[தொகு]

மெக்சிகோ நாட்டின் சொனோரா மாகாணத்திலுள்ள பாம்போலிட்டா சுரங்கத்தில் முதன்முதலில் செசுபுரோனைட்டு கண்டறியப்பட்டது. அமெரிக்காவின் கோச்சைசு மாகாண டாம்சுடோன் மாவட்டம், அரிசோனா, கிழக்கு டிண்டிக் மலைகள், யுவாப் மாகாணம், யூட்டா போன்ற பிற பகுதிகளிலும் செசுபுரோனைட்டு கிடைக்கிறது [4]. பெரும்பாலும் எலக்ட்ரம் எனப்படும் தங்கத்தின் கலப்புலோகம், டெய்னியைட்டு, காரல்பிரைசைட்டு, சோகோம்கேட்லைட்டு, உடாகைட்டு, லெய்சிங்கைட்டு, யென்செனைட்டு, ஏமடைட்டு போன்ற கனிமங்களும் சேர்ந்து இயற்கையில் செசுபுரோனைட்டு காணப்படுகிறது[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mineralienatlas
  2. Webmineral entry
  3. Williams, Sidney A. (1974). "Cesbronite, a new copper tellurite from Moctezuma, Sonora". Mineralogical Magazine 39. http://www.minersoc.org/pages/Archive-MM/Volume_39/39-307-744.pdf. பார்த்த நாள்: 2016-09-20. 
  4. Mindat.org Cesbronite
  5. "Handbook of mineralogy" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-09-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செசுபுரோனைட்டு&oldid=3357503" இலிருந்து மீள்விக்கப்பட்டது