செக்ரேனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செக்ரேனி
அங்கமி நாகா திருவிழாவில் நடனம் மற்றும் பாடல்
அதிகாரப்பூர்வ பெயர்செக்ரேனி
பிற பெயர்(கள்)சேக்ரே-ன்
பூசானி
கடைபிடிப்போர்அங்கமி மக்கள்
முக்கியத்துவம்புத்தாண்டு
கொண்டாட்டங்கள்பத்து நாட்கள்
நாள்25 பிப்ரவரி
நிகழ்வுவருடம் ஒருமுறை

செக்ரேனி ( Sekrenyi ) வட கிழக்கு இந்திய மாநிலமான]] நாகாலாந்தில், அங்கமி நாகர்களால் நடத்தப்படும் பல திருவிழாக்களில், செக்ரே-ன் என்றும் பூசானி என்றும் அழைக்கப்படும் செக்ரேனி, ஒரு முக்கிய ஆண்டு விழாவாகும். அங்காமி பொது அமைப்பின் கீழ் பல நிறுவனங்கள், மாநில அரசாங்கத்துடன் இணைந்து கெசி (பொதுவாக கிரிகோரியன் நாட்காட்டியில் பிப்ரவரி 25 உடன் தொடர்புடையது) அங்காமி நாட்காட்டி மாதத்தின் 25 வது நாளிலிருந்து பத்து நாட்களுக்கு இது அனுசரிக்கப்படுகிறது. இது கடந்த கால பாவங்கள் அனைத்தையும் துடைக்க நடத்தப்படும் "தூய்மை திருவிழா" ஆகும்.[1][2] ஒட்டுமொத்த கிராமத்தின் "உடல் மற்றும் ஆன்மாவை" தூய்மைப்படுத்தி, நாகாலாந்தின் அனைத்து சமூகத்தினரிடையே ஒற்றுமையை கொண்டு வருவதன் மூலம் புதுப்பித்து "புனிதமாக்குவது" திருவிழாவின் நோக்கமாகும். இது இளம் வயதினரை முதிர்ச்சியடைந்ததைக் குறிக்கிறது. மேலும், "அங்காமியின் அடையாளக் குறிப்பான்" எனக் கருதப்படுகிறது.[3][4] பழங்குடியினரிடையே கிறிஸ்தவ மதம் மாறியவர்கள் படிப்படியாக இந்த சடங்குகளை நிராகரித்தனர்.

விவரங்கள்[தொகு]

செக்ரேனி என்பதில் செக்ரே என்பது "புனிதப்படுத்துதல்" என்றும் நி என்பதன் பொருள் "பண்டிகை" என்பதனால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு வார்த்தையாகும். திருவிழா அட்டவணை விவசாய சுழற்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது கிராமத்திற்கு கிராமம் மாறுபடும். பொதுவாக டிசம்பர்-மார்ச் மாதங்களுக்கு இடையில் நடத்தப்படுகிறது. மேலும் காலமும் பத்து முதல் பதினைந்து நாட்கள் வரை மாறுபடும்.[3] கிரிகோரியன் நாட்காட்டியின்படி பிப்ரவரி 25 முதல் திருவிழா பொதுவாக நடத்தப்படுகிறது.[2] இது க்ருனா அங்கமி / ப்ஃபுட்சனா மற்றும் கிறிஸ்டியன் அங்கமி ஆகிய இரு சமூகத்தினராலும் கொண்டாடப்படுகிறது. முன்னதாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆனால் அதே இனத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ கிராமவாசிகளுக்கு காலம் ஐந்து நாட்களாக குறைக்கப்படுகிறது. அவர்கள் விழாக்களில் பங்கேற்கிறார்கள். ஆனால் அது தொடர்பான எந்த சடங்குகளையும் அவர்கள் பின்பற்றுவதில்லை.[3]

சடங்குகள்[தொகு]

விழாவில் அங்கமி நாகர்கள்

திருவிழாவில் பல சடங்குகள் செய்யப்படுகின்றன. கேசி என்று அழைக்கப்படும் முதல் நாளில், மக்கள் ஜூம்ஹோ என்ற பானையில் இருந்து எடுக்கப்பட்ட சில துளிகள் அரிசி தண்ணீரைத் தாங்கள் மேல் தெளிப்பார்கள். நீர் துளிகள் முதலில் இலைகளில் சேகரிக்கப்படுகின்றன. மேலும் வீட்டின் முக்கிய பெண்மணி மரியாதையுடன் வீட்டின் மூன்று முக்கிய மூலைகளில் இலைகளை வைப்பார். இதைத் தொடர்ந்து ஆண்கள் குளிப்பதற்காக கிணற்றருகே கூடுகிறார்கள்.[2]

இரண்டாவது நாள், கிராமத்து இளைஞர்கள் கிராமத்தில் கூடுகிறார்கள். அவர்கள் தங்களை இரண்டு புதிய சால்வைகளால் அலங்கரித்து, பின்னர் புனித நீரை தங்களின் மார்பு, முழங்கால்கள் மற்றும் வலது கைகளில் தூவி, அவர்களின் அனைத்து பாவங்களையும் துரதிர்ஷ்டத்தையும் கழுவுவதற்கான அடையாளமாக கருதுவர். அவர்கள் கிணற்றிலிருந்து திரும்பி வரும்போது, ஒரு சேவல் பலியிடப்படும். [2]

விழாவின் நான்காம் நாள் அங்காமிகளின் புத்தாண்டைக் குறிக்கிறது. [3] இது மூன்று நாட்கள் நீடிக்கும் பாடல் மற்றும் விருந்து களியாட்டத்துடன் தொடங்குகிறது. இளைஞர்கள், ஆண்கள் மற்றும் திருமணமாகாத பெண்கள் இருவரும் மொட்டையடித்த தலையுடன் கூடி, நாள் முழுவதும் பாரம்பரிய பாடல்களைப் பாடுகிறார்கள். பாடல்கள் கடந்த கால வீரம் மற்றும் துணிச்சலுடன் தொடர்புடையவை.[2][5] இசை மற்றும் நடனத்தின் களியாட்டத்திற்காக, சமூகத்தின் ஆண்களும் பெண்களும் பாரம்பரிய உடைகளை அணிவார்கள். ஆண்கள் தலையில் வேட்டையாடும் மண்வெட்டிகளை எடுத்துச் செல்லும் போது, பெண்கள் கூடைகளை எடுத்துச் செல்கிறார்கள்.[4]

ஏழாவது நாள் இனக்குழு இளைஞர்களால் வேட்டையாடப்படுகிறது. எட்டாவது நாளில், சடங்கில் ஒரு வாயிலைக் கீழே இழுப்பது (சொத்தை வரையறுக்கும் பழைய வாயிலை மாற்றுவது என்று பொருள்). இதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் கிராம மக்கள் முறைப்படி பரிமாறி, வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். பத்து நாள் உற்சவ காலத்தில், களப்பணிகள் நிறுத்தப்படுகின்றன. உள்ளூரில் இந்தச் செயல் பென்யூ என்று அழைக்கப்படுகிறது. [2] திருவிழா காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கிராமங்களில் உள்ள ஆண்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு ஆசிர்வாதம் பெறும்போது, பயிரிடுதல், வீடு கட்டுதல் மற்றும் திருமணங்கள் ஆண்டுக்கு மீண்டும் தொடங்கும் என நம்புகின்றனர். [3]

சான்றுகள்[தொகு]

  1. "Nagas to celebrate Sekrenyi". Telegraph India. 24 February 2016. http://www.telegraphindia.com/1120224/jsp/northeast/story_15170784.jsp#.VxEEqf7Nsmw. பார்த்த நாள்: 23 May 2016. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "The Major Festival: Sekrenyi". National Informatics Center. பார்க்கப்பட்ட நாள் 24 May 2016.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Joshi, Vibha (15 September 2012). A Matter of Belief: Christian Conversion and Healing in North-East India. Berghahn Books. பக். 12, 106–107. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85745-673-1. https://books.google.com/books?id=PWZjsBvrQCMC&pg=PA106. 
  4. 4.0 4.1 "Nagaland's Angami Tribe celebrates Sekrenyi Festival Nagaland's Angami Tribe celebrates Sekrenyi Festival". ANI News. 16 March 2016 இம் மூலத்தில் இருந்து 11 ஜூன் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160611201601/http://www.aninews.in/newsdetail2/story41784/Nagaland%27s-Angami-Tribe-celebrates-Sekrenyi-Festival.html. பார்த்த நாள்: 24 May 2016. 
  5. Kiranshankar Maitra (15 September 2011). Nagaland : The Land of Sunshine. Anjali Publishers. பக். 78–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-89620-92-9. https://books.google.com/books?id=-L7qAwAAQBAJ&pg=PA78. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்ரேனி&oldid=3675938" இலிருந்து மீள்விக்கப்பட்டது