சூழல்சார் கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எடித் மியுனியே (Edith Meusnier), கலைப்பொருள், போயிசு டி பேல்லா ரிவியர், கியூபெக், 2010
மார்க்கோ கசாகிராண்டே, மணற்புழு, புஃபோர்ட்04 சமலாகக் கலைக்கான மூவாண்டு நிகழ்வு, வென்டான், பெல்சியம், 2012

சூழல்சார் கலை (Environmental art) என்பது, கலையில் இயற்கை தொடர்பான வரலாற்று அணுகுமுறையையும், அண்மைக்கால சூழலியல் மற்றும் அரசியல் அடிப்படையில் ஊக்குவிக்கப்பட்ட ஆக்கங்களையும் தழுவிய கலை சார்ந்த பல்வேறு செயற்பாடுகளைக் குறிக்கும்.[1][2] சூழல்சார் கலை, புவி ஒரு சிற்பத்துக்கான மூலப்பொருள் என்னும் நிலைப்பாட்டில் இருந்து உருவான அக்கறையில் இருந்து விலகி; முறைமைகள், வழிமுறைகள், தோற்றப்பாடுகள் போன்றவை சமூக அக்கறையுடன் கொண்டுள்ள ஆழமான உறவுகளை நோக்கி வளர்ச்சியடைந்துள்ளது. 1990களில் ஒருங்கிணைந்த சமூக, சூழலியல் அணுகுமுறைகள், ஒழுக்கத்துடன் கூடிய திருத்தி அமைக்கும் நிலைப்பாடாக உருவாகியது.[3] காலநிலை மாற்றங்களின் சமூக பண்பாட்டு அம்சங்கள் முன்னணிக்கு வந்திருப்பதால், கடந்த பத்து ஆண்டுகளாக சூழல்சார் கலை உலகமெங்கும் இடம்பெறும் கண்காட்சிகளில் முக்கிய இடத்தைப் பெற்றுவருகின்றது.

"சூழல்சார் கலை" என்னும் தொடர் பெரும்பாலும் "சூழலியல்" அக்கறைகளைத் தழுவி அமைகின்றது ஆனால், அது சூழலியல் அக்கறைகலோடு மட்டும் தொடர்புடையவை அல்ல.[4] இது அடிப்படையில் கலைஞனுக்கு இயற்கையோடு கொண்டுள்ள தொடர்புகளை, இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் கொண்டாடுகின்றது.[1][2] இந்தக் கருத்துருவை, வரலாற்று அடிப்படையிலான புவி/நிலம் சார்ந்த கலை, வளர்ந்துவரும் சூழலியற் கலை என்பவை தொடர்பில் புரிந்துகொள்ள முடியும். நாட்டுப்புறம், புறநகரம், நகரம் ஆகிய எல்லாப் பகுதிகளையும் சார்ந்த நிலத்தோற்ற/சூழல் நிலைமைகளை சூழல்சார் கலை ஆக்கங்கள் உள்ளடக்குகின்றன.

வரலாறு[தொகு]

சூழல்சார் கலை, நமது முன்னோர்களின் பழங்காலக் குகை ஓவியங்களுடன் தொடங்குவதாக வாதிக்க முடியும். குகை ஓவியங்களில், மனித உருவங்களும் தொடக்ககால மனிதருக்கு முக்கியமான விலங்குகள் போன்ற இயற்கை அம்சங்கள் இடம்பெற்றாலும், நிலத்தோற்ற அம்சங்கள் கொண்ட குகை ஓவியங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இவை இயற்கையின் பழங்கற்கால நோக்கு ஆகும்.இயற்கை, ஏதோ ஒரு வழியில் பல நூற்றாண்டுகளாகவே ஆக்கக் கலைகளின் விருப்புக்குரிய கருப்பொருளாக இருந்துள்ளது.[5] தற்கால சூழல்சார் கலையின் எடுத்துக்காட்டுகள், நிலத்தோற்ற ஓவியங்களில் இருந்தும், நிலத்தோற்றம் சார்ந்த பிற வெளிப்பாடுகளிலும் இருந்தே உருவாகின்றன. ஓவியர்கள் களத்தில் வரையும்போது, சூழலுடன் அவர்களுக்கு ஆழமான தொடர்பு உருவாகின்றது. இதனால் அவர்கள் தாம் பார்த்து உணர்வதை வரைவு ஊடகத்துக்குக் கொண்டுவருகின்றனர். யோன் கான்சுட்டபிள் என்பவருடைய வான ஓவியங்கள் "இயற்கையில் வானத்தை மிகவும் நெருக்கமாக வெளிப்படுத்துகின்றன".[6] மொனெட்டின் இலண்டன் தொடர்களும் சூழலுடனான ஓவியரின் தொடர்புகளை எடுத்துக்காட்டுகின்றன. நிலத்தோற்றங்களுக்குத் தனியான இருப்பு இல்லையென்றும், ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டிருக்கும் அதற்கு, சூழவுள்ள வளிமண்டலமும் ஒளியுமே உயிர் கொடுத்து அதன் உண்மையான பெறுமானத்தை வெளிக்கொண்டுவருகின்றன எனவும் மொனெட் கருதினார்.[7]

சூழலியல் பிரச்சினைகளை எடுத்துச் சொல்வதற்கும், காலநிலை மாற்றங்கள் குறித்துக் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் டயான் புர்க்கோ போன்ற சமகால ஓவியர்கள் இயற்கைத் தோற்றப்பாடுகளையும் காலத்தோடு அவற்றில் ஏற்படும் மாற்றங்களையும் வெளிப்படுத்துகின்றனர்.[8][9] காலநிலை மாற்றங்கள் வலிந்து ஏற்படுத்தப்படுகின்றன என்னும் நோக்கையும், மரபியற் பொறியியல் ஊடாக மனிதர்கள் பிற உயிரினங்களில் தலையீடு செய்கின்றனர் என்பதையும் அலெக்சிசு ராக்மன் என்ன்னும் ஓவியரின் நிலத்தோற்றப் படைப்புக்கள் காட்டுகின்றன.[10]

மரபுவழிச் சிற்ப வடிவங்களுக்கான சவால்[தொகு]

சூழல்சார் கலை ஒரு இயக்கமாக 1960களின் பிற் பகுதியிலும் 1970களின் தொடக்கப் பகுதியிலும் வளர்ச்சியடைந்தது. தொடக்கக் கட்டங்களில் இது பெரிதும் சிற்பங்களுடன் தொடர்புபட்டிருந்தது. இயற்கைச் சூழலுடன் இசைவு இல்லாதனவும், காலத்துக்கு ஒவ்வாதனவுமான மரபு சார்ந்த சிற்ப வடிவங்களுக்கும், நடைமுறைகளுக்கும் எதிரான விமர்சனங்களில் இருந்தே இது உருவானது.

1968 அக்டோபரில் ராபர்ட் சிமித்சன் என்பவர் நியூயார்க்கில் உள்ள துவான் காட்சிக்கூடத்தில் "மண்வேலைகள்" (Earthworks) என்னும் தலைப்பில் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். காட்சியில் இருந்த ஆக்கங்கள் வழமையான கண்காட்சி, விற்பனை என்பன தொடர்பான கருத்துக்களுக்கு வெளிப்படையான சவாலாக அமைந்தன. காட்சியில் இருந்த ஆக்கங்கள் மிகவும் பெரியவையாகவும், கையாளுவதற்குக் கடினமானவையாகவும் இருந்தன. பலவற்றின் ஒளிப்படங்கள் மட்டுமே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இது விலைக்கு வாங்குவதற்கான அவர்களின் எதிர்ப்பை மேலும் தெளிவாகக் காட்டியது.[11] நகரங்களை விட்டு வெளியேறிப் பாலைவனங்களுக்குச் செல்வதன் மூலம், காட்சிக்கூடங்களின் சுவர்களுக்குள் கட்டுப்படுவதில் இருந்தும், நவீனவியக் கோட்பாடுகளில் இருந்தும் தப்புவது இந்தக் கலைஞர்களுக்குச் சாத்தியமாகியது.

மேற்படி ஆக்கங்கள் நிலத் தோற்றங்களைக் காட்டவில்லை ஆனால் அவற்றை ஆக்கங்களுடன் ஈடுபடுத்தின. அவர்களது கலை ஆக்கங்கள் நிலத்தோற்றங்கள் பற்றியது அல்லாமல், ஆக்கங்களை நிலத்தோற்றங்களுக்குள் கொண்டுவருவனவாக இருந்தன.[12]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Bower, Sam (2010). "A Profusion of Terms". greenmuseum.org. Archived from the original on 1 February 2014. பார்க்கப்பட்ட நாள் 29 January 2014.
 2. 2.0 2.1 Steinman, Susan. "WEAD, Women Environmental Artists Directory". WEAD, Women Environmental Artists Directory. பார்க்கப்பட்ட நாள் 3 February 2014.
  • Gablik, S. (1984) Has Modernism Failed? New York: Thames and Hudson.
  • Gablik, S. (1992) The Reenchantment of Art. New York: Thames and Hudson.
  • Matilsky, B., (1992) Fragile Ecologies: Contemporary Artists Interpretations and Solutions, New York, NY: Rizolli International Publications Inc.
 3. Weintraub, Linda. "Untangling Eco from Enviro". Artnow Publications. Archived from the original on 18 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 8 February 2014.
 4. "The Landscape in Art: Nature in the Crosshairs of an Age-Old Debate - ARTES MAGAZINE". ARTES MAGAZINE (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2016-04-04. பார்க்கப்பட்ட நாள் 2016-05-09.
 5. Thornes, John E. (2008). "A Rough Guide to Environmental Art". Annual Review of Environment and Resources 33: 391–411 [395]. doi:10.1146/annurev.environ.31.042605.134920 இம் மூலத்தில் இருந்து 2014-02-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140201224853/http://environment.arizona.edu/files/env/Thornes%20on%20Environmental%20Art%20in%20ARER_0.pdf. 
 6. House, John (1986). Monet: Nature into Art. London: Yale Univ. Press. p. 221. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-03785-2.
 7. "Painting Climate Change: An Interview with Artist Diane Burko About Her Show 'The Politics of Snow'". The Scientist. March 3, 2010. 
 8. Arntzenius, Linda (September 5, 2013). "Diane Burko's Polar Images Document Climate Change". Town Topics. 
 9. Tranberg, Dan (December 1, 2010). "Alexis Rockman". Art in America. http://www.artinamericamagazine.com/news-features/magazine/alexis-rockman/. பார்த்த நாள்: 8 February 2014. 
 10. Kastner, Jeffrey and Wallis, Brian (1998) Land and Environmental Art, London: Phaidon Press, p. 23, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7148-3514-5
 11. Beardsley, p. 7
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூழல்சார்_கலை&oldid=3555370" இலிருந்து மீள்விக்கப்பட்டது