சூறாவளி ஹையான்


சூறாவளி ஹையான் (Typhoon Haiyan) என்பது 2013 இல் பிலிப்பீன்சு நாட்டை தாக்கிய வெப்ப மண்டலச் சூறாவளி ஆகும். அமைதிப் பெருங்கடலில் 2013 நவம்பர் 2 அன்று உருவான இப்புயல் 2013 நவம்பர் 8 அன்று பிலிப்பின்ஸ் நாட்டின் மத்திய தீவான சமரில் அதிகாலை 4.40 மணியளவில் தாக்கியது.[1]

தாக்கங்கள்
[தொகு]பிலிப்பீன்சு
[தொகு]புயல் பாதிப்பில் சுமார் 7.50 லட்சம் பேர் வீடுகளை இழந்தும், 1,200-க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன [2][3]
ஹையான் புயல் கரையைக் கடந்தபோது, இப்புயலின் மையப்பகுதியில் மணிக்கு 235 கி.மீ. வேகத்திலும், மேலே உந்தும் சக்தி மணிக்கு 275 கி.மீ. வேகத்திலும் வீசியதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.[4] ஹையான் புயல் கடந்து சென்ற பகுதிகளில் இருந்த 70 முதல் 80 சதவீதம் வரையிலான வீடுகளும், கட்டடங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. ஹையான் புயலின் வேகம் அமெரிக்காவில் வீசும் கடும் புயல்களில் 4-ம் வகைக்கு இணையானதாக அமைந்துள்ளது.[5]
இந்தப் புயலால் சுமார் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6,60,000 பேர் வீடுகளை இழந்துள்ளதாகவும் ஐ.நா. மதிப்பிட்டுள்ளது[6]
வியட்நாம்
[தொகு]வியத்நாமில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 6 லட்சம் மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சீனா
[தொகு]ஹையான் புயல் சீனாவில் கரையைக் கடக்கவிருப்பதால், அந்நாட்டில் செம்மஞ்சள் நிற எச்சரிக்கைக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இது சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய அபாய எச்சரிக்கையாகும்.
இந்த ஆண்டில் சீனாவைத் தாக்கும் 30-ஆவது புயலான ஹையான், இந்த ஆண்டிலேயே அதிகபட்ச வேகம் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.[7][8]
நடப்பு செய்திகள்
[தொகு]பிலிப்பைன்ஸ் சூறாவளியில் 10000 க்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம் என நடப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.[9][10][11]
புயல் நிவாரணம்
[தொகு]புயல் நிவாரணப்பணிகளை செஞ்சிலுவை இயக்கம் மேற்கொள்கின்றது.[12][13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிப்பின்ஸில் ஹையான் புயல் தாக்குதல் தினமணி 09.11.2013
- ↑ பிலிப்பின்ஸ் புயல்: 1,200 பேர் பலி? தினமணி 09.11.2013
- ↑ பிலிப்பைன்ஸ் சூறாவளியில் 1000 க்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம்' பி பி சி
- ↑ தி இந்து
- ↑ புயலுக்கு 10,000 பேர் பலியானதாக அச்சம்
- ↑ ஹையான் புயலால் 1 கோடி பேர் பாதிப்பு: பிலிப்பின்ஸில் குடிநீர், மருந்து இன்றி மக்கள் அவதி தினமணி 13.11.2013
- ↑ ஹையான் புயல்: பிலிப்பின்ஸில் 10,000 பேர் சாவு? தினமணி
- ↑ http://timesofindia.indiatimes.com/world/rest-of-world/Typhoon-Haiyan-makes-landfall-in-Vietnam-US-meteorologists/articleshow/25571739.cms
- ↑ http://www.firstpost.com/world/typhoon-haiyan-death-toll-could-reach-10000-in-philippines-1220783.html
- ↑ http://www.thehindu.com/news/international/world/10000-feared-dead-as-typhoon-haiyan-hits-philippines/article5334872.ece
- ↑ புயல்: லட்சக்கணக்கானோர் உணவின்றி தவிப்பு
- ↑ http://www.redcross.org/news/article/Typhoon-Haiyan-Disaster-Alert? t
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-09. பார்க்கப்பட்ட நாள் 2013-11-10.