சூறாவளி நர்கீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சூறாவளி நர்கீஸ்
Extremely severe cyclonic storm (இ.வா.து. அளவு)
Category 4 (சபிர்-சிம்ப்சன் அளவு)
Nargis 01 may 2008 0440Z.jpg
சூறாவளி நர்கீஸ் மே 1 இல்
தொடக்கம்ஏப்ரல் 27, 2008
மறைவுமே 3, 2008
உயர் காற்று3-நிமிட நீடிப்பு: 165 கிமீ/ம (105 mph)
1-நிமிட நீடிப்பு: 215 கிமீ/ம (135 mph)
தாழ் அமுக்கம்962 hPa (பார்); 28.41 inHg
இறப்புகள்≥15,000 மொத்தம்
பாதிப்புப் பகுதிகள்இலங்கை, இந்தியா, வங்காளதேசம், மியான்மார்
2008 வட இந்திய சூறாவளி பருவம்-இன் ஒரு பகுதி

சூறாவளி நர்கீஸ் (Cyclone Nargis) என்பது மியான்மாரில் (பர்மா) மே 2008 இல் வீசிய கடும் சூறாவளியைக் குறிக்கும். இச்சூறாவளியின் தாக்கத்தால் மியான்மாரில் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் குறைந்தது 22,500 பேர் கொல்லப்பட்டதாகவும் அறியப்படுகின்றது[1]. நர்கீஸ் மியான்மாரைத் தாக்கும் முன்னர் கடைசியாக 2006 ஆம் ஆண்டில் சூறாவளி மாலா இந்நாட்டைத் தாக்கியது.

ஏப்ரல் 27, 2008 இல் நர்கீஸ் சூறாவளி வங்காள விரிகுடாவின் நடுப்பகுதியில் முதன் முதலில் தோன்றியது. ஆரம்பத்தில் மிக மெதுவாக வடமேற்குத் திசையில் நகர்ந்த இச்சூறாவளி தனக்குச் சாதகமான காலநிலையை சந்தித்ததில் அதன் தாக்கம் தீவிரமாகியது. ஏப்ரல் 29 அளவில் உலர்ந்த காற்று இதன் தாக்கத்தைக் குறைத்திருந்தாலும், மே 2 இல் அதன் வேகம் தீவிரமடைந்து குறைந்தது 165 கிமீ/மணி (105 மைல்/மணி) வேகத்தை அடைந்தது. அதன் உயர் வேகம் 215 கிமீ/மணி (135 மைல்/மணி) ஆகப் பதியப்பட்டது. மியான்மாரின் "ஐராவதி" டெல்டா கரையை உயர் செறிவில் தாண்டிய சூறாவளி பின்னர் யங்கோன் (ரங்கூன்) நகரை கடந்தபோது அதன் தாக்கம் படிப்படியாகக் குறைந்து மியான்மார்-தாய்லாந்து எல்லையில் மறைந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Myanmar: Death toll more than 15,000'. CNN. May 5, 2008. Retrieved on 2008-05-05

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூறாவளி_நர்கீஸ்&oldid=1827719" இருந்து மீள்விக்கப்பட்டது