சூரிய வானிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூரிய வானிலை (Solar weather) என்பது வானிலையியலின் ஒரு பிரிவு ஆகும். சூரியனின் நடத்தைகள் மற்றும் அதற்கான முன்கணிப்புகள் என்ன வகையில் செய்ய முடியும் என்பதை ஆராய்வதற்கான வானிலையியலின் ஒரு கிளையாகும் [1].

சூரியனின் சாத்தியமுள்ள நடத்தைகளின் ஒப்புருவாக்கம் குறித்து ஆய்வுமேற்கொள்வது உள்ளிட்ட நடத்தைகளும் சூரிய வானிலை ஆராய்ச்சியில் அடங்கும். உதாரணமாக, சாத்தியமுள்ள சூரிய புயல் பற்றி செயற்கைக்கோள்களுக்கு எச்சரிக்கைகள் கொடுத்து உதவமுடியும்.சூரியனின் மிகப்பெரிய அளவு காரணமாகவும், சிக்கலான கருத்து அமைப்புகள் காரணமாகவும் பூமியின் வானிலை கணிப்புகள் போல சூரியனிலுள்ள வானிலைக் கணிப்புகள் சூரியப் புள்ளித் தரவுகளைத் தவிர சிறப்புடையதாக இல்லை.

விண்வெளியின் வானிலையுடன் சூரிய வானிலை நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. பெரும்பாலும் இவையிரண்டும் ஒன்றே என்கிற போக்கிலும் வகைப்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Arnold Hanslmeier (2007). The Sun and Space Weather (2nd Edition). Springer; Softcover reprint of hardcover 2nd ed. 2007 edition. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9048174065
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரிய_வானிலை&oldid=2748182" இலிருந்து மீள்விக்கப்பட்டது