சூரியச் சுழற்சி 10

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சூரியச் சுழற்சி 10
ரிச்சார்ட் ஹரிங்கடன் அவர்களால் குறிக்கப்பட்ட சூரியச்ச் சுழற்சி 10 இன் போது தென்பட்ட சூடியப் புள்ளிகள் (செப்டம்பர் 1, 1859).
சூரியப்புள்ளித் தரவு
தொடக்க நாள்திசம்பர் 1855
இறுதி நாள்மார்ச் 1867
காலம் (வருடங்கள்)11.3
அதிக கணிப்பு98.0
அதிக கணிப்பு மாதம்February 1860
குறைந்த கணிப்பு5.2
Spotless days406
சுழற்சிக் காலம்
முன் சுழற்சிசூரியச் சுழற்சி 9 (1843-1855)
அடுத்த சுழற்சிசூரியச் சுழற்சி 11 (1867-1878)

சூரியச் சுழற்சி 10 (Solar cycle 10) என்பது 1755 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட பத்தாம் சுழற்சியாகும்[1][2] . இச்சுழற்சி 1855 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி 1867 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் 11.3 ஆண்டுகளுக்கு நீடித்தது. பன்னிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 10 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 98.0 எண்ணிக்கையும் (டிசம்பர் 1810) குறைந்த பட்சமாக 5.2 எண்ணிக்கையுமாகக் கணக்கிடப்பட்டது.[3]. இச்சுழற்சியின் போது அண்ணளவாக 406 நாட்கள் எவ்விதமான சூரியப் புள்ளிகளும் தென்படவில்லை.[4][5][6]

1859 சூரியப் புயல்[தொகு]

1859 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் இரண்டாம் திகதிகளில் ஏற்பட்ட சூரியப் புயல் ஒன்று பூமியின் காந்தசக்தியினைப் பாதித்தது. இச்சூரியப்புயலே பூமியினைத் தாக்கிய மிகப்பெரிய புவிக்காந்தப் புயல் ஆகும். இதனை ஹரிங்டன் நிகழ்வு எனவும் அழைக்கின்றனர். உலகம் பூராகவும் சோதி தென்பட்டடது. குறிப்பாக கரீபியன் தீவுப் பகுதிகளிலும் ரொக்கி மலைத் தொடர்ப் பகுதியிலும் மிகவும் பிரகாசமாக இச்சோதி தென்பட்டது.[7][8] இச்சொதியினால் இரவு நேரத்தினை காலை நேரமாகா மாற்றி ஓர் பாரிய தோற்ற மயக்கத்தை அளித்ததுடன் மட்டுமன்றி இப்பிரதேசங்களில் வசித்து வந்த மக்கள் தமது காலை உணவுகளையும் தயாரிக்கத் தொடங்கினார்கள் என செய்திகள் குறிப்பிடுகின்றன.[9]

இதன் காரணமாக வட அமெரிக்கா, ஐரோப்பா முழுவதும் தொலைத்தந்திச் சேவைகள் பாதிக்கப்பட்டன.[10] அவற்றுள் சில தாமாகவே செய்திகள் அனுப்பியதுடன், சில தீப்பற்றி எரிந்தன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kane, R.P. (2002). "Some Implications Using the Group Sunspot Number Reconstruction பரணிடப்பட்டது 2012-12-04 at Archive.today". Solar Physics 205(2), 383-401.
  2. "The Sun: Did You Say the Sun Has Donuts?". Space Today Online. 12 August 2010 அன்று பார்க்கப்பட்டது.
  3. SIDC Monthly Smoothed Sunspot Number. "[1]"
  4. Spotless Days. "[2]"
  5. What's Wrong with the Sun? (Nothing) more information: Spotless Days. "[3] பரணிடப்பட்டது 2008-07-14 at the வந்தவழி இயந்திரம்"
  6. Solaemon's Spotless Days Page. "[4]"
  7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Odenwald என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  8. "NASA — Severe Space Weather".
  9. "Timeline: The 1859 Solar Superstorm".
  10. "The Great Storm: Solar Tempest of 1859 Revealed".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியச்_சுழற்சி_10&oldid=3245767" இருந்து மீள்விக்கப்பட்டது