சூரத் தேங்காய் உடைத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சூரத் தேங்காய் உடைத்தல் என்பது இந்து சமயத்தில் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு நேர்த்திக்கடனாகும். பொதுவாக விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைக்கும் வழக்கம் உள்ளது. நேர்த்திக் கடனுக்காக நல்ல, பெரிதான தேங்காயை தேர்ந்தெடுக்கின்றனர். பின்பு விநாயகர் சந்நிதி முன்பு அதற்காக வைக்கப்பட்டுள் கல்லில் அடித்து உடைக்கின்றனர். இவ்வாறு உடைக்கப்படும் தேங்காய் சிதரல்களை உடைக்கும் பக்தர்கள் எடுத்து செல்வதில்லை. மற்ற பக்தர்களும், கோவிலுக்கு அருகில் வசிப்பவர்களும் பிரசாதமாக எடுத்துக் கொள்கின்றனர். இந்த சடங்கினை சிதறு காய் உடைத்தல் என்றும் அழைக்கின்றனர்.

இந்த நேர்த்திக் கடனை செலுத்துவதற்கு கோவிலில் அனுமதி பெறுதல் போன்றவை இல்லை. இந்த சடங்கினை ஐயர் மற்றும் பூசாரிகள் செய்வதில்லை. சூரத்தேங்காய் உடைப்பதாக வேண்டும் பக்தர்களே இதனைச் செய்கின்றார்கள்.

தேங்காய் மீது சூடம் ஏற்றி தொழிற்கூடங்கள், கடைகள் போன்றவற்றை துவங்கும் போதும், அம்மாவாசை போன்ற தினங்களிலும் இந்த சூரத் தேங்காய் வனிக நிறுவனங்கள் முன்பு உடைக்கப்படுகிறது. அத்துடன் புதுமனை புகுதல், பணி ஓய்வு பெற்று வீடு திரும்புதல் போன்ற சுபகாரியங்களின் தொடக்கத்திலும் இந்த சூரத் தேங்காய் உடைக்கப்படுகிறது. இவ்வாறு செய்தால் திருஷ்டி கழியும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

திருநள்ளாறு போன்ற கோயில்களில் பிரதான தெய்வங்களை தரிக்கும் முன்பு விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதால், கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது. [1]

ஆதாரங்கள்[தொகு]

  1. திருத்தலம் அறிமுகம்: தங்கக் காகத்தில் சனீஸ்வரர்- திருநள்ளாறு :பிருந்தா கணேசன்- தி இந்து-சூலை 16, 2015