சூரத் அதிவிரைவுப் பேருந்து
Appearance
சூரத் அதிவிரைவுப் பேருந்து போக்குவரத்து Surat BRTS | |
---|---|
தகவல் | |
அமைவிடம் | சூரத்து, இந்தியா |
போக்குவரத்து வகை | விரைவுப் போக்குவரத்து |
மொத்தப் பாதைகள் | 15 |
நிலையங்களின் எண்ணிக்கை | 148 |
இயக்கம் | |
பயன்பாடு தொடங்கியது | நவம்பர் 2013 (முதற்கட்டம்) |
நுட்பத் தகவல் | |
அமைப்பின் நீளம் | 114 கிலோமீட்டர்கள் (71 mi) |
சூரத்து அதிவிரைவுப் பேருந்து போக்குவரத்து, இந்திய மாநிலமான குஜராத்தின் சூரத் நகரத்தில் இயக்கப்படும் அதிவிரைவு போக்குவரத்துத் திட்டமாகும். இது சூரத் மாநகராட்சியால் இயக்கப்படுகிறது. இவ்வகை அதிவிரைவுப் பேருந்துகள் மட்டுமின்றி, மாநகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
வழித்தடங்கள்
[தொகு]முதற்கட்டம்
[தொகு]முதற்கட்டமாக இரு வழித்தடங்களில் பேருந்துகள் செயல்படவுள்ளன.
- வழித்தடம் 1 : சூரத் - நவசாரி (10 கி.மீ)
- வழித்தடம் 2 : டுமஸ் ரிசார்ட்டு - கெனால் ரோடு - சர்தாணா ஜகாதனாகா [20 கி.மீ]
இரண்டாம் கட்டம்
[தொகு]இரண்டாம் கட்டமாக ஒன்பது வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும்
- வழித்தடம் 3 : வராசா வழித்தடம்
- வழித்தடம் 4 : கோடு ரிங் ரோடு
- வழித்தடம் 5 : சூரத் பார்டோலி
- வழித்தடம் 6 : கதார்காம் தர்வாஜா - அம்ரோலி
- வழித்தடம் 7 : ராந்தேர் ரோடு
- வழித்தடம் 8 : குஜராத் கேஸ் சர்க்கிள் - அணுவரத் துவார்
- வழித்தடம் 99: கஜீரா ரோடு