உள்ளடக்கத்துக்குச் செல்

சுஹைல்தேவ் அதிவிரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

22420/22419 சுஹைல்தேவ் அதிவிரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகிறது. வாரம் மும்முறை இயக்கப்படும் இந்த வண்டி, தில்லியில் உள்ள ஆனந்து விகார் முனையத்தில் இருந்து காசீப்பூர் நகரம் வரை சென்று திரும்பும்.[1]

வழித்தடமும் நேரமும்[தொகு]

22420 எண் கொண்ட ஆனந்து விகார் - காசீப்பூர் சுஹைல்தேவ் அதிவிரைவுவண்டி, ஒவ்வொரு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில், மாலை 6:45 மணிக்கு, தில்லி ஆனந்து விகாரில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9:15 மணிக்கு காசீப்பூரை வந்தடையும். 22419 எண் கொண்ட காசீப்பூர் - ஆனந்து விகார் அதிவிரைவுவண்டி, ஒவ்வொரு புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5:30 மணிக்கு, காசீப்பூரில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை 8:10 மணிக்கு தில்லியை வந்தடையும்.[1]

இந்த வண்டி, காசியாபாத், மொராதாபாத், பரெய்லி, லக்னோ, சுல்தான்பூர், ஜாபராபாத், ஜவுன்பூர், அவுனிஹர் ஆகிய ஊர்களில் நின்று செல்லும்.[1]

சான்றுகள்[தொகு]