உள்ளடக்கத்துக்குச் செல்

சுவாமிநாத தேசிகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூசை, சுவாமிநாத தேசிகர்
பிறப்புசுவாமிநாத தேசிகர்
(1860-11-11)11 நவம்பர் 1860
வளவனூர்
இறப்பு7 மே 1939(1939-05-07) (அகவை 78)
திருக்கோவிலூர்
பணிஎழுத்தாளர்

'சுவாமிநாத தேசிகர் எனும் "'சூசை (Swaminatha Desikar, "Susai ) (19ம் நூற்றாண்டு), வளவனூர் என்ற இடத்தில் தமிழ் வளர்க்கும் தேசிகர் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

குடும்பப் பின்னணி

[தொகு]

சுவாமிநாத தேசிகர் தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் மயிலம் அருகிலுள்ள வளவனூர் எனும் கிராமத்தில் பழையான சைவ சித்தாந்தத்தைப் பின்பற்றும் தேசிகர் குடும்பத்தில் 19ம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்தவர். சுவாமிநாத தேசிகரின் தந்தையார் மக்களாலும் பல மொழியியல் அறிஞர்களாலும் மதிக்கப்பட்ட சைவ சமய தத்துவவாதியும் சிற்பியுமான சுந்தரேசனார் ஆவார். தமிழின் சிறந்த கவிஞரான வேலையர் அவரது தாத்தா ஆவார்.[1]

சுவாமிநாத தேசிகரின் பெரிய தாத்தாவான சிவப்பிரகாசர் "கற்பனைக் களஞ்சியம்" என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் சிற்றிலக்கியப் புலவர். இவர், "கவி சார்வ பெளமா", "நன்னெறி சிவப்பிரகாசர்", "துறைமங்கலம சிவப்பிரகாசர்" என்று பலவாறாக அழைக்கப்பட்டார். தமிழகத்தில் சைவ வளர்ச்சிக்கு வித்திட்ட சமய குரவர்களான சம்பந்தர், சுந்தரர், அப்பர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கும் "நால்வர் நான்மணி மாலை" என்ற கவிதை நூலை இவர் எழுதினார். இவர் முப்பதிற்கும் மேற்பட்ட சைவ சமயச் சார்புள்ள நூல்களை இயற்றியுள்ளார். அவற்றில் ஒன்றான 'திருச்செந்தூர் நீரோட்டக யமக அந்தாதி (உதடு ஒட்டாமல் பாடப்படும் ஒரு செய்யுள் முறை) முறையில் முப்பது வெண்பா முறையிலமைந்த பாடல்களை இயற்றியுள்ளார். மேலும் "நன்னெறி", இயேசு மத நிராகரணம் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.[2][3] புதுச்சேரி அருகில் உள்ள நல்லாற்றூர் எனும் ஊரில் தனது 32 ம் வயதில் முக்தியடைந்தார்.[4][5]

இளமைப் பருவம்

[தொகு]

சுவாமிநாத தேசிகர் அனைத்து கலைகளையும் தனது இளமையிலேயே கற்றுத் தேறினவரானார். அக்காலத்தின் தலைசிறந்த தத்துவவாதியாக திகழ்ந்த அவர் சிறந்த சிற்பியுமாவார். சைவ சித்தாந்த பிரிவினராக இருந்தபடியால் அனைத்து கோவில்களிலும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் செய்தும் வந்தார். அவரது பெரிய தாத்தா எழுதிய இயேசு மத நிராகரணம் என்ற நூலிலிருந்தே பெரும்பாலும் சொற்பொழிவாற்றி வந்த அவர் பின்பு கிறித்தவ மதக் கருத்துக்களால் கவரப்பட்டு 1884 ஆம் ஆண்டு கிறித்தவத்தை தழுவினார்.[சான்று தேவை]

இறுதி வருடங்கள்

[தொகு]

சுவாமிநாத தேசிகர் தனது 79ம் வயதில் திருக்கோவிலூர்ல் மறைந்தார்.

எழுத்தாக்கங்கள்

[தொகு]

சுவாமிநாத தேசிகர் மூன்று புத்தகங்களும் பல்லேறு கூத்துக்கதைகளையும் எழுதியுள்ளார்.[சான்று தேவை]

புத்தகங்கள்

[தொகு]
  • ஞானசௌந்தரி கூத்துக்காவியம்
  • இயேசுவின் உயிர்ப்பு
  • நான் ஏன் கிறித்தவனானேன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.tamilbooksonline.in/searchbooks1.php?code=TA014539&&bookname=SIVAPRAKASAR%20ARULIYA%20SIVA%20JEEVA%20IKKIYAM
  2. https://www.scribd.com/doc/88685765/ME-A-BOAT#fullscreen
  3. மு.அருணாச்சலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை:தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 214
  4. "Archived copy". Archived from the original on 2015-04-01. பார்க்கப்பட்ட நாள் 2015-03-29.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. "Archived copy". Archived from the original on 2012-02-13. பார்க்கப்பட்ட நாள் 2012-04-18.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாமிநாத_தேசிகர்&oldid=4055573" இலிருந்து மீள்விக்கப்பட்டது