சுவரொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு திரைப்படத்தின் சுவரொட்டி

சுவரொட்டி (Poster) என்பது மதில் அல்லது செங்குத்துச் சுவர்களில் ஒட்டப்படும் விதத்தில் வடிவமைக்கப்படும் அச்சிடப்பட்ட தாள் ஆகும். பொதுவாகச் சுவரொட்டிகள் அச்சுக்கலை, வரைகலைக் கருவிகளால் முழுமையாகவோ பகுதியாகவோ தயாரிக்கப்படும். விளம்பரம் (கலை நிகழ்ச்சி, திரைப்படம் சார்ந்தவை), பரப்புரை (அரசியல்), எதிர்ப்புப் போராட்டம் போன்றவற்றின் தகவற்பரிமாற்றத்திற்கான முக்கியக் கருவியாகச் சுவரொட்டிகள் உள்ளன. சுவரொட்டிகளில் பார்வையாளரின் கவனத்தை ஈர்க்கும் விதமாகத் தகவலும், வடிவமைப்பும் இருக்கும்.

பயன்பாடு[தொகு]

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதற்காக இந்த சுவரொட்டிகள் அதிக அளவில் பயன்படுகின்றன.

வகைகள்[தொகு]

வண்ணங்களை வைத்து இவற்றை ஒற்றை வண்ண (Monotone) சுவரொட்டி, பல்வண்ண சுவரொட்டி எனவும், அச்சிடப்படும் விதத்தின் அடிப்படையில் லித்தோ போஸ்டர் என்றும் வகைப்படுத்தலாம். பயன்பாட்டின் அடிப்படையில் திரைப்பட சுவரொட்டி, அஞ்சலி சுவரொட்டி, நிறுவனங்களின் பொருட்கள் அல்லது சேவைகள் குறித்த விளம்பர சுவரொட்டி என்றும் பிரிக்கலாம்.


ஓர் எளிய சுவரொட்டி
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவரொட்டி&oldid=2956935" இருந்து மீள்விக்கப்பட்டது