சுல்பா சஞ்சய் கோத்கே
சுள்பா சஞ்சய் கோத்கே Sulbha Sanjay Khodke | |
---|---|
Member of the மகாராட்டிர சட்டமன்றம் சட்டமன்றம் பேத்னர் சட்டமன்ற தொகுதி | |
பதவியில் 2004–2009 | |
முன்னையவர் | தியானேசுவர் தானே பாட்டீல் |
பின்னவர் | ரவி ராணா |
Member of the மகாராட்டிர சட்டமன்றம் சட்டமன்றம் அமராவதி சட்டமன்ற தொகுதி | |
பதவியில் 2019 – த்ற்போதுவரை (2023) | |
முன்னையவர் | சுனில் தேசுமுக்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி (2014 வரை)
இந்திய தேசிய காங்கிரசு(2014-2018) தேசியவாத காங்கிரசு கட்சி (2018-2019) இந்திய தேசிய காங்கிரசு(2019 முதல்) |
துணைவர் | சஞ்சய் கோத்கே |
பிள்ளைகள் | சன்யுக்தா, Yash |
வேலை | அரசியல்வாதி |
சுல்பா சஞ்சய் கோத்கே (Sulbha Sanjay Khodke) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மகாராட்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். அமராவதி சட்டப்பேரவை தொகுதியிலிருந்து மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4] விதர்பா நீர்ப்பாசன மேம்பாட்டுக் கழகத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார். இதற்கு முன்பு 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை பத்னேரா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பல்வேறு அரசாங்கங்களில் இயக்குநராகவும் தலைவராகவும் இருந்தார். மகாராட்டிரா மாநில நுகர்வோர் கூட்டமைப்பு, மும்பை, மகாராட்டிர மாநில கூட்டுறவு வங்கிகள் கூட்டமைப்பு, அமராவதி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிறுவனம், அமராவதி சில்லா மத்திய வர்த்தி கூட்டுறவு வங்கி, , சித்திவினய் பச்சட்கட் மகாசங்கம் போன்ற நிறுவனங்களின் பொறுப்புகளிலும் சுல்பா சஞ்சய் கோத்கே பணிபுரிந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Meet Maharashtra's 24 women MLAs | India News - Times of India". The Times of India.
- ↑ "23 Out of 288: Women Form Tiny Minority in Newly Elected Maharashtra Assembly". News18.
- ↑ Joshi, Manas (24 October 2019). "Amravati Results: Congress's Sulbha Khodke defeats BJP's Sunil Panjabrao Deshmukh". www.indiatvnews.com.
- ↑ Arya, Shishir (14 October 2019). "Cong finds NCP member ideal to fight under its symbol". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/nagpur/cong-finds-ncp-member-ideal-to-fight-under-its-symbol/articleshow/71571598.cms. பார்த்த நாள்: 11 November 2019.