சுர்ஜித் பல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுர்ஜித் பல்லா (Surjit Bhalla) என்பவர் ஒரு இந்திய பொருளாதார நிபுணர், எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர், தேசிய மற்றும் சர்வதேச பொருளாதாரக் கொள்கை அரங்கில் விரிவான அனுபவத்தைக் கொண்டவர். சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) இந்தியாவுக்கான நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர்.[1][2][3] இவர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் பகுதி நேர உறுப்பினராகவும் இருந்தார்.[4]

சுர்ஜித் பல்லா
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுபொருளாதார நிபுணர், எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்‘'நாம் எப்படி வாக்களிக்கிறோம்'’ (How we vote) என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார்.[5]

பணிகள்[தொகு]

பொருளாதார ஆராய்ச்சியாளரான இவர், புதிய தொழில்களுக்கான ஆலோசனைகளை வழங்குபவர். பொருளாதார ஆராய்ச்சி தொடர்பான பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய முதல் புத்தகம் விக்கெட்டுக்கு இடையே: யார் சிறந்தவர் ஏன்? (Between the Wickets: The Who and The Why) என்பதாகும்.[6] 2014 முதல் இவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பங்களிக்கும் ஆசிரியராகவும் உள்ளார்.[7] தேர்தலில் வெற்றிபெற முக்கிய காரணிகளை பற்றி இவர் குறிப்பிடும் போது

"தேர்தலில் வெற்றி பெற இரண்டு விசயங்கள் முக்கியம். முதலில் பொருளாதாரம் அடுத்தது தலைமை."

என்று இவர் கூறுகிறார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுர்ஜித்_பல்லா&oldid=3942433" இலிருந்து மீள்விக்கப்பட்டது