சுர்சாகர் ஏரி

ஆள்கூறுகள்: 22°18′03″N 73°12′13″E / 22.30083°N 73.20361°E / 22.30083; 73.20361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுர்சாகர் ஏரி
Sursagar Lake
சந்த் தலாவ்
குசராத்தில் ஏரி அமைவிடம்
குசராத்தில் ஏரி அமைவிடம்
சுர்சாகர் ஏரி
Sursagar Lake
அமைவிடம்வதோரா, குசராத்து, இந்தியா
ஆள்கூறுகள்22°18′03″N 73°12′13″E / 22.30083°N 73.20361°E / 22.30083; 73.20361
வகைஏரி
வதோதராவில் உள்ள சுர்சாகர் ஏரி

சுர்சாகர் ஏரி (Sursagar Lake) என்பது சந்த் தலாவ் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் வதோதரா நகரின் நடுவில் அமைந்துள்ள ஒரு ஏரியாகும். இந்த ஏரி 18ஆம் நூற்றாண்டில் கற்களால் புனரமைக்கப்பட்டது. இந்த ஏரியில் உள்ள தண்ணீர் ஆண்டு முழுவதும் அப்படியே இருக்கும். மக்கள் அமரும் வகையில் ஏரியைச் சுற்றிலும் பைஞ்சுதை சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

வதோதரா மகாநகர் சேவா சதனால் கட்டப்பட்ட 111 அடிகள் (34 m) உயரச் சிவபெருமானின் சிலை ஏரியின் நடுவில் உள்ளது. 1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தச் சிலை அமைக்கும் பணி 2002ஆம் ஆண்டு நிறைவடைந்தது. 2023ஆம் ஆண்டு மகாசிவராத்திரி விழாவில் சிவபெருமானின் திருவுருவச் சிலைக்குப் பொன் பூசப்பட்டது . இதற்கு சுமார் 17.5 kg (39 lb) கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டது. இத்தங்கத்தின் மதிப்பு சுமார் 12 கோடி இந்திய ரூபாய்கள் (பிப்ரவரி 2023 நிலவரப்படி $1,449,879.60) சிவன் சிலை மகா சிவராத்திரி அன்று விளக்குகளால் ஏற்றப்படுகிறது.

ஏரி நிரம்பினால் ஏரியிலிருந்து நீரை வெளியேற்ற நீருக்கு அடியில் பல மதவுகள் உள்ளன. ஏரியிலிருந்து வெளியேறும் நீர் விசுவாமித்திரி ஆற்றில் கலக்கிறது. இந்த ஏரி படகு சவாரிக்கு பயன்படுத்தப்படுகிறது.

2023ஆம் ஆண்டு இந்தச் சிலை மறுவடிவமைப்புக்குப் பிறகு ஏரியில் படகு சவாரி மீண்டும் தொடங்கப்பட்டது.

ஆண்டுதோறும் ஏராளமான தற்கொலைகள் இந்த ஏரியில் நடைபெறுவதாக அறியப்படுகிறது. சனவரி மற்றும் அக்டோபர் 2014க்கு இடையில், 15 தற்கொலைகள் பதிவாகியுள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுர்சாகர்_ஏரி&oldid=3800486" இலிருந்து மீள்விக்கப்பட்டது