சுரோஜித் சாட்டர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுரோஜித் சாட்டர்ஜி (Surojit Chatterjee) ஒரு இந்திய வங்காள பாடகர்-பாடலாசிரியர், இசை இயக்குனர், ஆவர். வங்காள பூமி என்ற இசைக்குழுவின் [1] முன்னணி பாடகர் ஆவார். தவிரவும் இவரது தனி இசைக்குழுவான சுரோஜித் ஓ போந்துராவின் உரிமையாளரும் ஆவார். இவர் ஃபோல்கிரா (டைம்ஸ் மியூசிக்) என்ற அவரது இசைத் தொகுப்பிற்காக 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் சிறந்த ஆண் பாடகருக்கான ரேடியோ மிர்ச்சி இசை விருதை வென்றுள்ளார். இவர் இச்சே, முக்தோதரா, ஹண்டா மற்றும் போண்டா போன்ற வங்காள திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார் .

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ராம்பூர்ஹாட்டில் பிறந்த சுரோஜித் சாட்டர்ஜி, பிர்பூமில் தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார், அதன் பிறகு கொல்கத்தாவில் உள்ள ஜூலியன் டே உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஏழாவது வயதில் தபேலா வாசிக்கத் தொடங்கிய இவர், அலகாபாத் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து எட்டு ஆண்டுகள் பயின்று பட்டம் பெற்றார். இவர் துஹின் சாட்டர்ஜியிடமிருந்து கிட்டார் வாசிக்கக் கற்றுக்கொண்டார், அதன் பிறகு மேலும் கிட்டார் நிபுணத்துவத்தைத் தொடர்ந்தார், மேலும் கிதார் கலைஞர் அமித் தத்தாவிடம் வழிகாட்டுதல் மற்றும் நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். இவரது முதல் இசைக்குழு கிராஸ்ரூட் ஆகும், இது அவரது கல்லூரி நாட்களில் அவர் உருவாக்கியதும் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளில் பல விருதுகளை வென்றதும் ஆகும்.

பூமி இசைக்குழு[தொகு]

சுரோஜித் சாட்டர்ஜி 1999 ஆம் ஆண்டு தனது இணை பங்குதாரர் சௌமித்ரா ரேயுடன் இணைந்து வங்காள இசைக்குழுவான பூமியை உருவாக்கினார். இக்குழு 24 சூலை 1999 அன்று கொல்கத்தாவில் உள்ள கியான் மஞ்ச் அரங்கத்தில் தனது முதல் நிகழ்ச்சியைத் தொடங்கியது. பூமி இசைக்குழு தமது பாடல் வரிகள் மற்றும் தாள இசையின் எளிமையுடன் வங்காளத்தின் கிராமம் முதல் நகரம் வரை அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய முடிந்தது.[சான்று தேவை]பூமி குழு கடந்த 12 ஆண்டுகளில் 12 பிரபலமான இசைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது.

சுரோஜித் ஓ போந்துரா[தொகு]

இசைத்தொகுப்பின் முகப்புப் படம் – சுரோஜித் ஓ போந்துரா – வெளியீடு 2012
அபியோன்டோரீன் – ஆல்பம் கவர் – வெளியீடு 2013
ஃபோல்கிரா – இசைத்தொகுப்பின் முகப்புப் படம் – வெளியீடு 2013

சுரோஜித் சாட்டர்ஜி தனது முதல் தனி இசைக்குழுவான சுரோஜித் ஓ போந்துரா இசைக்குழுவை [2] 2012 ஆம் ஆண்டில் உருவாக்கினார்.  கொல்கத்தாவைச் சேர்ந்த இசைக்கலைஞர்களில் 2012 ஆம் ஆண்டிற்கான ரேடியோ மிர்ச்சியின் சிறந்த ஆண் பாடகருக்கான விருதை இவர் வென்றுள்ளார் . இவரது முதல் தனி இசைத்தொகுப்பான சுரோஜித் ஓ போந்துராவை 2013 ஆம் ஆண்டின் சிறந்த தொகுப்பாக ரேடியோ மிர்ச்சி தேர்ந்தெடுத்தது. அவரது இரண்டாவது தனி இசைத்தொகுப்பு அபியோன்டோரீன் ஆகும். [3] இந்த இசைக்குழு ஆஷா ஆடியோவிலிருந்து ஃபோக் கனெக்சனையும், 2016 ஆம் ஆண்டில் பாப்னா ரெக்கார்டுகளிலிருந்து அமர் போரன் ஜஹா சாய்வையும் வெளியிட்டது.

இவர் சுரோஜித் ஓ போந்துரா இசைத்தொகுப்புகள், கோன் ரூப்நாகரே கொன்யா தோமர் பாரி மற்றும் அப்யொன்டோரீன் ஆகியோருக்கு பல பாடல்களை எழுதிய கமாலினி சாட்டர்ஜியை மணந்தார், இத்தம்பதியினருக்கு அன்னவேஷா சாட்டர்ஜி என்ற மகள் உள்ளார்.

மேற்கொள்கள்[தொகு]

  1. "Bhoomi Music of Earth – Team". Archived from the original on 2014-08-17. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
  2. "Surojit Chatterjee records first solo album". Archived from the original on 2014-07-03. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
  3. "New Album "Obhontorin" set to release on 20th July". banglanext.com. Banglanext. Archived from the original on 29 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 18 July 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரோஜித்_சாட்டர்ஜி&oldid=3675799" இலிருந்து மீள்விக்கப்பட்டது