உள்ளடக்கத்துக்குச் செல்

சுருள்வு (விளையாட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுருள்வு
Curling
2005 டிம் ஆர்ட்டன்சு பிரியரில் இடம்பெற்ற சுருள்வு விளையாட்டுக்கள்
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்புஉலக சுருள்வு கூட்டமைப்பு
பிற பெயர்கள்பனியில் சதுரங்கம், முழங்கும் விளையாட்டு
முதலில் விளையாடியதுஏறத்தாழ நடுக்கால இறுதி இசுக்காட்டுலாந்தில்
பதிவு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள்மதிப்பு. 1,500,000[1]
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள்
தொடர்புஇல்லை
அணி உறுப்பினர்கள்அணிக்கு நால்வர் (2 கலப்பிருவரில்)
இருபாலரும்இருவரும் கலப்பிருவரில்
பகுப்பு/வகைதுல்லியமும் பிழையின்மையும்
கருவிகள்சுருள்வு துடைப்பங்கள், கற்கள் (பாறைகள்), சுருள்வு காலணிகள்
விளையாடுமிடம்சுருள்வு படுகை
தற்போதைய நிலை
ஒலிம்பிக்முதன்முதலில் 1924இல் (2006இல் பின்னோக்கி அங்கீகரிக்கப்பட்டது)
செய்விளக்க விளையாட்டாக 1932, 1988 மற்றும் 1992 ஆண்டுகளில்
அதிகாரபூர்வமாக 1998 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் சேர்க்கப்பட்டது.
இணை ஒலிம்பிக்அலுவல்முறையாக 2006ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது.

சுருள்வு (curling) என்ற விளையாட்டாளர்கள் பனிப்படுகையில் கற்களை நான்கு ஒன்றனுள் ஒன்றான வட்டங்களால் பிரிக்கப்பட்டுள்ள இலக்குப் பரப்பை நோக்கி சறுக்கவிட்டு விளையாடும் உடல் திறன் விளையாட்டு ஆகும். நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு அணிகள் ஒவ்வொருவராக, கனத்த, தீட்டிய கருங்கற் கற்களை, (பாறைகள் எனவும் இவை அறியப்படும்) பனி சுருள்வுப் படுகையினூடாக பனியில் வட்டமாக குறிக்கப்பட்டிருக்கும் இலக்கான தங்கள் இல்லத்தை நோக்கி தள்ளிவிடுகின்றனர்.[2] ஒவ்வொரு அணிக்கும் எட்டு கற்கள் உள்ளன. விளையாட்டின் நோக்கம் ஒரு ஆட்டத்தில் மிகக்கூடிய புள்ளிகளைப் பெறுவதாகும். ஒரு முனையிலிருந்து இரு அணிகளும் தங்களின் அனைத்துக் கற்களையும் தள்ளி முடிந்தபின் இல்லத்தின் மையத்திற்கு அருகேயுள்ள கற்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். ஓர் ஆட்டத்தில் எட்டு அல்லது பத்து முனைகள் இருக்கும்.

குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சுருள்வு விளையாட்டாளர்கள். இரு துடைப்பாளர்களையும் கல் தள்ளுபவரையும் காண்க
சுருள்வு உருவ விளக்கப்படம்
இசுக்காட்டுலாந்தில் கில்சித் என்றவிடத்தில் கொல்சியத்தில் கட்டப்பட்டுள்ள சுருள்வு குட்டை.

கல் வீசுபவர் மெதுவான சுழற்சியுடன் தள்ளுவதால் கற்களுக்கு சுருண்ட பாதையில் செல்ல இயல்கிறது. மேலும் அணியின் மற்ற இருவர் சுருள்வு துடைப்பங்கள் கொண்டு அதனுடன் பயணித்து நகரும் கல்லுக்கு முன்புள்ள பனியின் நிலையை மாற்றுவதன் மூலம் கல்லின் வளைவுப்பாதையை தூண்ட முடியும். இந்த விளையாட்டில் சிறந்த பாதையையும் ஒவ்வொரு நிலைக்குமேற்ப கற்களை நிறுத்தவும் மிகுந்த உத்தியும் குழுப்பாங்கும் தேவையாகும். கல் தள்ளுபவரின் திறமையைப் பொறுத்தே வேணுடிய இடத்தில் கற்களை செலுத்த முடியும். இதனாலேயே இது "பனியின் சதுரங்கம்" எனப்படுகிறது.[3][4]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Curling Makes Gains in U.S. Popularity". Yahoo Sports. 19 November 2011. Archived from the original on 2 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 16 பிப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. Wetzel, Dan (2010-02-19). "Wetzel, Dan. (February 19, 2010) ''Don't take curling for granite'' Yahoo! Sports". Sports.yahoo.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-04.
  3. "'Chess on ice'". Princeton Allumni Weekly. 2009-01-28. பார்க்கப்பட்ட நாள் 2010-10-10.
  4. "Chess on ice". The Curling News. 2007-06-22. பார்க்கப்பட்ட நாள் 2010-10-10.

மேலும் அறிய

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சுருள்வு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருள்வு_(விளையாட்டு)&oldid=3833711" இலிருந்து மீள்விக்கப்பட்டது