சுருதி மொகாபத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Indian woman in wheelchair receives award from a man who is President
குடியரசுத் தலைவர்ராம்நாத் கோவிந்திடம் இருந்து நாரி சக்தி விருதினைப் பெரும் மொகபத்ரா

சுருதி மொகாபத்ரா (Sruti Mohapatra)(பிறப்பு 1963) என்பவர் இந்திய ஊனமுற்றோர் உரிமை ஆர்வலர் ஆவார்.

பணி[தொகு]

சுருதி மொஹபத்ரா 1963 ஆம் ஆண்டு பிறந்தார்.[1] இவர் இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகரான புவனேசுவரத்தில் வசிக்கிறார்.[2][1] 1987ஆம் ஆண்டில், இவர் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக சேவையை தொடர விரும்பினார். ஆனால் மகிழ்வுந்து விபத்தில் இவரது முதுகுத் தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டது.[1] மொகபத்ரா சக்கர நாற்காலியில் வாழ்க்கையினை தொடர வேண்டியதானது. இவர் ஊனமுற்றோர் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்.[2] குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான ஒடிசா மாநில ஆணையத்தின் தலைவராகவும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான தேசியக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.[3]

2009ஆம் ஆண்டில், பூரியில் உள்ள ஜெகன் நாதர் கோவிலை சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றப்பட்டபோது மற்ற ஆர்வலர்களுடன் இணைந்து வெற்றி பெற்றார்.[4] இந்தியாவில் COVID-19 தொற்றுநோய்களின் போது, ஒடிசாவில் 43 சதவீத ஊனமுற்ற குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறுவதாக எச்சரித்தார்.[5]

விருதுகளும் அங்கீகாரமும்[தொகு]

மொகபத்ரா 2010-ல் ரியல் ஹீரோஸ் விருதைப் பெற்றார்.[1] 2022ஆம் ஆண்டு அனைத்துல பெண்கள் நாளன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மொகபத்ராவிற்கு 2021ஆம் ஆண்டிற்கான நாரி சக்தி விருதினை வழங்கினார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Baral, Maitree (6 November 2017). "'Disability' Rendered Her Unsuitable For IAS: Meet Sruti Mohapatra, Crusader For People With Disabilities" (in en). NDTV. https://www.ndtv.com/education/success-story-disability-rendered-her-unsuitable-for-ias-meet-sruti-mohapatra-crusader-for-different-1770772. 
  2. 2.0 2.1 "Sruti Mohapatra Gives The Disabled Opportunities She Never Had" (in en). Outlook India. 5 February 2022. https://www.outlookindia.com/magazine/story/sruti-mohapatra-gives-the-disabled-opportunities-she-never-had/207321. 
  3. 3.0 3.1 Kainthola, Deepanshu (8 March 2022). "President Presents Nari Shakti Puraskar for the Years 2020, 2021" (in en). Tatsat Chronicle Magazine. https://tatsatchronicle.com/president-presents-nari-shakti-puraskar-for-the-years-2020-2021/. 
  4. Mahapatra, Sampad (28 October 2009). "Temple for special people". NDTV. https://www.ndtv.com/india-news/temple-for-special-people-401357. 
  5. "43 lakh disabled students across states may drop out, unable to cope with e-education". The Times of India. 25 July 2020. https://timesofindia.indiatimes.com/home/education/43-lakh-disabled-students-across-states-may-drop-out-unable-to-cope-with-e-education-report/articleshow/77169020.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருதி_மொகாபத்ரா&oldid=3429056" இலிருந்து மீள்விக்கப்பட்டது