ஊனமுற்றோர் உரிமை இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஊனமுற்றோர் உரிமை இயக்கம் (disability rights movement) என்பது, ஊனமுற்றோருக்குச் சம வாய்ப்புக்களையும், சம உரிமைகளையும் பெற்றுக்கொள்வதற்கான ஒரு இயக்கம் ஆகும். போக்குவரத்து, கட்டிடக்கலை, பௌதீகச் சூழல் ஆகியவற்றில் அணுகுதகைமையும், பாதுகாப்பும்; பிறரைச் சார்ந்திராத வாழ்க்கைக்கான சம வாய்ப்பு, வேலை வாய்ப்பு, கல்வி, வீட்டு வசதி என்பன; இழிவுபடுத்தல், புறக்கணிப்பு, நோயாளிகளின் உரிமை மீறல் போன்றவற்றிலிருந்து விடுதலை ஆகியவை இவ்வியக்கத்தின் குறிப்பான நோக்கங்களும் கோரிக்கைகளும் ஆகும்.[1] இத்தகைய வாய்ப்புக்களையும், உரிமைகளையும் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான குடிசார் உரிமைச் சட்டவாக்கங்களையும் இவ்வியக்கம் வேண்டிநின்றது.[1][2]

குறிப்புக்கள்[தொகு]

  1. 1.0 1.1 Abuse, Neglect and Patient Rights by the Disability Rights Wisconsin website
  2. Bagenstos, Samuel (2099). Law and the Contradictions of the Disability Rights Movement. New Haven: Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-300-12449-1.