சுமித் ஆன்டில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமித் ஆன்டில்
219-இல் சுமித் ஆன்டில்
தனிநபர் தகவல்
பிறப்பு6 சூலை 1998 (1998-07-06) (அகவை 25)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுதடகள் வீரர், இணை ஒலிம்பிக் விளையாட்டு வீரர்
மாற்றுத்திறன் வகைப்பாடுT64
சாதனைகளும் விருதுகளும்
மாற்றுத் திறனாளர் இறுதி2020 டோக்கியோ
தனிப்பட்ட சாதனை(கள்)WR 68.55 m (2021)[1]

சுமித் ஆன்டில் (Sumit Antil) (பிறப்பு: 6 சூலை 1998) இந்தியாவின் ஈட்டி எறியும் தடகள வீரரும், இணை ஒலிம்பிக் விளையாட்டு வீரரும் ஆவார். இவர் 30 ஆகஸ்டு 2021 அன்று 2020 டோக்கியோ இணை ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறியும் (T64 பிரிவு) விளையாட்டில், 68.55 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து உலக சாதனை புரிந்து தங்கப்பதக்கம் வென்றார்.[2][3] [4] இவர் அரியானா மாநிலத்தில் உள்ள சோனிபத் அருகே கேவ்டா எனுமிடத்தில் பிறந்தவர்.[5]2015-இல் நடந்த மோட்டார் பைக் விபத்தில் இவர் தனது இடது கால் முட்டிக்கு கீழ் பகுதியை இழந்தார். கோஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை சுமித் ஆன்டிலுக்கு இணை ஒலிம்பிக் விளையாட்டிற்காக ஈட்டி எறியும் பயிற்சி வழங்கியது. [6]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமித்_ஆன்டில்&oldid=3555093" இருந்து மீள்விக்கப்பட்டது