சுமித்ரா வால்மீகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுமித்ரா வால்மீகி (Sumitra Valmiki)(பிறப்பு: சனவரி 1, 1955) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மத்தியப் பிரதேசத்திலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் உறுப்பினர் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் மத்தியப் பிரதேச பிரிவின் துணைத் தலைவர் ஆவார்.

பணி[தொகு]

சுமித்ரா வால்மீகி 1993-ல் மத்தியப் பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரானார். 1999ஆம் ஆண்டில், அவர் முதல் முறையாக மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004-ல், இவர் மீண்டும் இரண்டாவது முறையாக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2006-ல், சுமித்ரா வால்மீகி மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மகளிர் அணியின் நகரத் தலைவரானார். இதே ஆண்டில், மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாநகராட்சியின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014ஆம் ஆண்டில், மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் வெற்றி பெற்று மீண்டும் மாநகர உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் இவர் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாநகராட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சுமித்ரா வால்மீகி, மத்தியப் பிரதேசத்தின் படன்-தெஹ்சில் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள சாபுராவில் தலித் சாதிக் குடும்பத்தில் பிறந்தார். அரசாங்க பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். சாபுரா பள்ளி, பதான்-தெகசில் ஜபல்பூர் மாவட்டம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, தனது பகுதியில் உள்ள பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான தையல் வகுப்பை கற்பித்தார். இவர் சட்ட அறிவையும் கொண்டவர். அப்பகுதியின் பெண்கள் நலனுக்காகத் தொடர்ந்து போராடுகிறார். பெண்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் அவர்களின் பகுதி தொடர்பான பிற பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் இவரது சமூக அர்ப்பணிப்பு இவரைப் பிரபலமாக்கியது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rajya Sabha olls 2022: Full list of candidates elected unopposed to Upper House". Times Now. 3 June 2022. பார்க்கப்பட்ட நாள் 3 June 2022.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "हैलो...भोपाल आने के लिए हेलिकाप्टर भेजें क्या?:CM शिवराज का फोन सुन हैरान रह गईं राज्यसभा प्रत्याशी सुमित्रा वाल्मीकि; जानिए पूरी कहानी". Dainik Bhaskar. பார்க்கப்பட்ட நாள் 1 June 2022.
  3. "BJP's Rajya Sabha candidates from Madhya Pradesh file nominations". India Today. 31 May 2022. பார்க்கப்பட்ட நாள் 1 June 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமித்ரா_வால்மீகி&oldid=3709985" இலிருந்து மீள்விக்கப்பட்டது