சுமதி சீனிவாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமதி சீனிவாஸ்
தேசியம்இந்தியர்
பணிசமூக தொழில்முனைவோர், பத்திரிகை ஆசிரியர், தன்னம்பிக்கை பேச்சாளர்
வாழ்க்கைத்
துணை
சீனிவாஸ்
வலைத்தளம்
twilitecreations.in

சுமதி சீனிவாஸ், இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக தொழில்முனைவோரும், பத்திரிகை ஆசிரியரும், தன்னம்பிக்கை பேச்சாளருமாவார். நிகழ்வு மேலாண்மையின் பல பிரிவுகளைக் கொண்ட ஊடக நிறுவனமான தி ட்விலைட் குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலகரும் நிறுவன தலைவருமாக பணியாற்றி வருகிறார். சுமதி, சோல்மேட்ஸ் அறக்கட்டளை என்ற அரசு சாரா அமைப்பின் நிர்வாக அறங்காவலராகவும் இருந்து வருகிறார். திருமதி . ஹோம் மேக்கர் என்ற பெண்களுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், உயரடுக்கு பெண்கள் சங்கம் எனப்படும் வணிக வலையமைப்பு மன்றத்தின் நிறுவனராகவும், நாம் மற்றும் கிளப் எலைட் போன்ற பத்திரிகை இதழ்களின் பொறுப்பாசிரியராகவும் பல்வேறு தொழில் முகங்களை கொண்ட ஆளுமையாவர். [1]

சமூக ஈடுபாடு[தொகு]

சுமதி சீனிவாஸ், 2013 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சோல்மேட்ஸ் அறக்கட்டளை என்ற அரசு சாரா அமைப்பின் [2] [3] நிர்வாக அறங்காவலராக இருந்து வருகிறார். இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் "பெண்களின் மேம்பாடு மற்றும் பின்தங்கிய குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்திற்காக" செயல்படுகிறது. சுமதி, தொண்டு சமூக சேவை, மற்றும் மனித குலத்திற்கு சேவை செய்யும் பணியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டபெண் என்பதால் பிறருக்கு கற்றுக்கொடுப்பதில் ஆர்வமுடன் காணப்பட்டுள்ளார். சோல்மேட்ஸ் அறக்கட்டளையில் அவரது முக்கிய மேற்கோள் "உங்கள் ஆன்மாக்களுக்கு கடன் கொடுங்கள்" என்பதாகும்: " நாம் அனைவரும் பெரிய விஷயங்களைச் செய்ய முடியாது. ஆனால் நாம் சிறிய விஷயங்களை மிகுந்த அன்புடன் செய்ய முடியும் என்ற கொள்கையைக் கொண்டுள்ள இவர், சமூக செயல்பாடுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளார்.

'நாம் ' இதழ்[தொகு]

நாம் என்ற இந்த பெண்களுக்கான பிரத்தியேக இதழ் [4] பதினைந்து ஆண்டுகளாக பிரசுரிக்கப்பட்டு வரும் ஒரு இந்திய ஆங்கில இதழாகும, இது ஃபேஷன், சினிமா, உறவுகள் மற்றும் சமூகத்தில் முத்திரை பதித்த சாதனையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியதாக உருவாகி வெளியிடப்பட்டு வருகிறது.[5][6]

விருதுகள்[தொகு]

  • தமிழக அரசின் சிறந்த பெண் தொழிலதிபர் விருது
  • சாதனை பெண்கள் விருது
  • அன்னை தெரசா சிறப்பு விருது
  • ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3230 மூலம் பெண் சாதனையாளர் 2014
  • தாகூர் பொறியியல் பெண் சாதனையாளர் விருது
  • மழைத்துளிகள் சாதனை பெண் [7]
  • பெண்நலம் விருது
  • மகிளா ஜோதி விருது
  • ஆண்டின் தமிழ் வணிகப் பெண்கள் (யுகே) [8]
  • பெண் வெற்றிக்கு பின்
  • நேச்சுரல்ஸ் அசாதாரண பெண் விருது
  • பெண் தொழில்முனைவோர் நல சங்கத்தின் சிறந்த பெண் தொழில்முனைவோர் விருது

மேற்கோள்கள்[தொகு]

  1. Vijayan, Naveena (2016-05-09). "More than words" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/features/metroplus/sumathi-srinivas-inspires-entrepreneurs-across-the-world/article8576155.ece. 
  2. subramanian, anupama (2014-01-18). "Sumathi sets the clichés straight". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-22.
  3. "Recognising a Soulmate's Contribution to Success". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-04-22.
  4. "When women entrepreneurs shared empowering stories – Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-04-22.
  5. "Yashika looked pretty at the 14th We Awards at Feathers – Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-04-22.
  6. "Sivakarthikeyan, SJ Surya, Vikram Prabhu, Pa Ranjith, Atlee at 12th We Awards 2016 – Photos". International Business Times, India Edition (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-22.
  7. "Raindropss Women Achiever Awards – WAA (2019)". www.eventyas.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-22.
  8. admin (2016-04-21). "WE magazine CEO Mrs.Sumathisrinivas was invited to give a speech in british parliment". B4 U Media (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-22.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமதி_சீனிவாஸ்&oldid=3682818" இலிருந்து மீள்விக்கப்பட்டது