சுபம் ஜக்லான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபம் ஜக்லான்
— குழிப்பந்தாட்டக்காரர் —
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு16 ஆகத்து 2004 (2004-08-16) (அகவை 19)
இசுரான கிராமம், பானிபத் மாவட்டம் அரியானா
தேசியம் இந்தியா
வசிப்பிடம்புது தில்லி
பணிவாழ்வு
தகுநிலைதொழில்முறை
Achievements and awards
என்டிடிவி - வளர்ந்து வரும் வீரர் விருது2013
மார்கதர்சன் விருது2013

சுபம் ஜக்லான் (Shubham Jaglan)(பிறப்பு 16 ஆகத்து 2004) ஒரு இந்திய தொழில்முறை குழிப்பந்தாட்ட வீரர், இவர் இளையோர் குழிப்பந்தாட்ட உலகப் போட்டியை 2015 இல் வென்றார் . 2012 இல் நடந்த போட்டியில் இவர் உலக சாதனை படைத்துள்ளார். என்டிடிவி - வளர்ந்து வரும் வீரர் விருது, மற்றும் "மார்க்தர்சன்" விருதுகளையும் பெற்றவர். ஜக்லான் 100 உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் வென்றுள்ளார். [1] [2] [3] [4] [5] [6] [7]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஜக்லான் அரியானாவின் பானிபத் மாவட்டத்தில் இசுரானா என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை பால் கறக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். மேலும், இவரது குடும்பத்தினர் இந்திய துணைக் கண்டத்தில் போட்டியிடும் மல்யுத்தத்தின் ஒரு வடிவமான பயில்வானி பயிற்சி அளித்து வருகிறார்கள். இவர் தனது கிராமத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். இப்போது தில்லியில் உள்ள இலட்சுமன் பொதுப் பள்ளியில் படித்து வருகிறார்.

குழிப்பந்தாட்ட வாழ்க்கை[தொகு]

கபூர் சிங் என்ற வெளிநாடு வாழ் இந்தியரால் இவரது கிராமத்தில் தொடங்கப்பட்ட குழிப்பந்தாட்டப் பயிற்சி கழகத்தில் இவரது தாத்தா இவரை சேர்த்தார். இவரது குடும்பத்தின் விருப்பத்திற்கு எதிராகவும், கழகம் மூடப்பட்ட போதிலும், ஜக்லான் தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒரு சிறிய நிலத்தில் தனது பயிற்சியைத் தொடர்ந்தார். இந்த நிலம் இவரது தந்தையால் சுத்தம் செய்யப்பட்டு மூன்று துளைகளுடன் பச்சை நிறமாக மாற்றப்பட்டது. ஜக்லானின் உருவாக்கும் பயிற்சியின் பெரும்பகுதி யூடியூபில் உள்ள வீடியோக்களிலிருந்து சுயமாகக் கற்றுக்கொள்ளப்பட்டது.

பின்னர் இவர் குழிப்பந்தாட்ட அறக்கட்டளையால் கண்டுபிடிக்கப்பட்டார். இது இவருக்கு ஆண்டுக்கு 2.0 லட்சம் ரூபாய் உதவித்தொகையும், தில்லி குழிப்பந்தாட்ட சங்கத்தில் உறுப்பினர் நிலையையும் வழங்கியது. இதன் விளைவாக தனது பயிற்சியைத் தொடர இவர் தனது தந்தையுடன் தில்லிக்கு இடம் பெயர்ந்தார். [8] [9] [10]

போட்டி வெற்றி[தொகு]

  • 2013 இளையோர் குழிப்பந்தாட்ட உலக முதுநிலை [11]
  • 2015 இளையோர் குழிப்பந்தாட்ட உலகப்போட்டி [12]
  • 2016 ஐரோப்பிய இளையோர் குழிப்பந்தாட்டப் போட்டி [13]

குறிப்புகள்[தொகு]

  1. "World Junior Golf title". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/sports/golf/top-stories/Milkmans-son-Shubham-Jaglan-lifts-world-junior-golf-title/articleshow/48130512.cms. 
  2. "Shubham Jaglan wins World Junior Golf Championship". http://www.ibnlive.com/news/sports/10-year-old-shubham-jaglan-wins-world-junior-golf-championship-1022114.html. 
  3. "Shubham vows to beat Nicklaus record". http://golfingindian.com/interviews_posts/shubham-vows-beat-nicklaus-record/. 
  4. "Son of milk-man lifts Junior World Golf Championships title". http://www.firstpost.com/sports/ten-year-old-son-milk-man-shubham-jaglan-lifts-junior-world-golf-championships-title-2350318.html. 
  5. "From field golf to world champion golfer" இம் மூலத்தில் இருந்து 21 ஜூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150721172121/http://sports.ndtv.com/golf/news/212718-shubham-jaglan-from-field-golf-to-world-champion-golfer. 
  6. "India's next big thing". இந்தியா டுடே. http://indiatoday.intoday.in/story/shubham-jaglan-golf-prodigy-indias-next-big-thing-tiger-woods-is-passe-indian-golfer-albatross-junior-golf-tournament/1/327141.html. 
  7. "Tiger Woods befriended". http://zeenews.india.com/sports/golf/meet-the-boy-wonder-from-india-whom-tiger-woods-befriended_748603.html. 
  8. "World Junior Golf title". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/sports/golf/top-stories/Milkmans-son-Shubham-Jaglan-lifts-world-junior-golf-title/articleshow/48130512.cms. பார்த்த நாள்: 19 July 2015. "World Junior Golf title". The Times of India. Retrieved 19 July 2015.
  9. "India's next big thing". இந்தியா டுடே. http://indiatoday.intoday.in/story/shubham-jaglan-golf-prodigy-indias-next-big-thing-tiger-woods-is-passe-indian-golfer-albatross-junior-golf-tournament/1/327141.html. பார்த்த நாள்: 19 July 2015. "India's next big thing". India Today. Retrieved 19 July 2015.
  10. "Tiger Woods befriended". http://zeenews.india.com/sports/golf/meet-the-boy-wonder-from-india-whom-tiger-woods-befriended_748603.html. பார்த்த நாள்: 19 July 2015. "Tiger Woods befriended". Zee News. Retrieved 19 July 2015.
  11. "Shubham Jaglan: Tiger Woods is passe, meet India's next big thing!". இந்தியா டுடே. http://indiatoday.intoday.in/story/shubham-jaglan-golf-prodigy-indias-next-big-thing-tiger-woods-is-passe-indian-golfer-albatross-junior-golf-tournament/1/327141.html. பார்த்த நாள்: 4 June 2016. 
  12. "Shubham Jaglan, Ten-year-old Son of a Haryana Milkman, Lifts Junior World Golf Championship Title". என்டிடிவி இம் மூலத்தில் இருந்து 4 ஜூன் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160604010845/http://sports.ndtv.com/golf/news/245751-shubham-jaglan-ten-year-old-son-of-a-milk-man-from-haryana-lifts-junior-world-golf-championships-title. பார்த்த நாள்: 4 June 2016. 
  13. "India's Shubham Jaglan Clinches Maiden European Junior Golf Title". என்டிடிவி இம் மூலத்தில் இருந்து 3 ஜூன் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160603121341/http://sports.ndtv.com/golf/news/259149-india-s-shubham-jaglan-clinches-maiden-european-junior-golf-title. பார்த்த நாள்: 4 June 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபம்_ஜக்லான்&oldid=3367623" இலிருந்து மீள்விக்கப்பட்டது