சுந்தரக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுந்தரக்கோட்டை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஓர் கிராமம் ஆகும். இது மன்னார்குடி அல்லது ராஜமன்னார்குடியிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது. மன்னார்குடியில் உள்ள இராஜகோபாலசுவாமி திருக்கோயில் மிகவும் பெருமை வாய்ந்தது[சான்று தேவை]. இங்கு செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளையின் கீழ் பெண்கள் கல்லூரி,பெண்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, பெண்கள் கல்வியியல் கல்லூரி மற்றும் மேலாண்மைப் பள்ளி நடத்தப்படுகின்றன.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 10.67° N 79.43° E ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 6 மீட்டர் (19 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 61,588 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மன்னார்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மன்னார்குடி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தரக்கோட்டை&oldid=1815129" இலிருந்து மீள்விக்கப்பட்டது