சுதிர் மகாட்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதிர் மகாட்டோ
Sudhir Mahato
சார்க்கண்ட்டு துணை முதல்வர் அலுவலகம்
பதவியில்
14 செப்டம்பர் 2006 – 23 ஆகத்து 2008
பின்னவர்இசுடீபன் மாரண்டி
தொகுதிஇச்சாகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சுதிர் மகாட்டோ

1961
இறப்பு(2014-01-23)சனவரி 23, 2014
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசார்க்கண்டு முக்தி மோர்ச்சா
துணைவர்சபீதா மகாட்டோ
வாழிடம்(s)கத்மா, கிழக்கு சிங்பூம் மாவட்டம்

சுதிர் மகாட்டோ (Sudhir Mahato) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1990 ஆம் ஆண்டில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2005 ஆம் ஆண்டில் நடந்த சார்க்கண்டு சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டார். சார்கண்ட்டு முக்தி மோர்ச்சா கட்சியின் உறுப்பினராக இச்சாகரிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்கும் பின்னர் சார்க்கண்டு சட்டமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 14 செப்டம்பர் 2006 முதல் 23 ஆகத்து 2008 வரை மது கோடாவின் கீழ் சார்க்கண்டு மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருந்தார் [1] [2]

தனது 53 வயதில் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள காட்சிலாவில் பாரிய மாரடைப்பு காரணமாக 23 சனவரி 2014 அன்று சுதிர் மகாட்டோ இறந்தார். [3] [4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதிர்_மகாட்டோ&oldid=3785610" இலிருந்து மீள்விக்கப்பட்டது