சுசுரி அணை

ஆள்கூறுகள்: 21°35′48″N 74°29′48″E / 21.596660°N 74.496660°E / 21.596660; 74.496660
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுசுரி அணை
சுசுரி அணை is located in மகாராட்டிரம்
சுசுரி அணை
Location of சுசுரி அணை in மகாராட்டிரம்
அமைவிடம்சகாதா
புவியியல் ஆள்கூற்று21°35′48″N 74°29′48″E / 21.596660°N 74.496660°E / 21.596660; 74.496660
உரிமையாளர்(கள்)மகராட்டிர அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுகோமை ஆறு

மகாவீர் பந்தாரா (மகாவீர் லீவி) என்று அழைக்கப்படும் சுசுரி அணை (Susri Dam) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் நந்துர்பார் மாவட்டத்தின் ஷாஹாதாவின் வடக்கே 7 கிலோமீட்டர்கள் (4.3 mi) தொலைவில் உள்ளது. சுசுரி அணை நீரைத் திசைதிருப்பும் நோக்கில் கட்டப்பட்ட அணையாகும்.

சுசுரி ஆறு கோமாய் நதியின் வடியாறாகும்.[1] இரண்டு ஆறுகளும் சாத்பூரா மலைத்தொடரில் உருவாகின்றன. சகாடாவிற்கு வடக்கே 7 கி.மீ. தொலைவில் தாரா பேட்டை அருகே இரண்டு ஆறுகளும் 200 முதல் 500 மீட்டருக்கு அருகருகே பயணிக்கின்றன. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பொறியாளர்கள் கரையினை சுசுரி ஆற்றின் நீர் பாதையைத் தடுக்க கட்டினர். கோமாய் ஆற்றில் அதிகமாக வரும் ஆற்றின் நீர் சுசுரி ஆற்றில் வரும் வகையில் கட்டப்பட்டது. எனவே கோமாய் ஆற்றில் கட்டப்பட்ட சுசுரி அணை இப்பணியினைச் செய்கிறது. இது சுசுரி தடுப்பணையிலிருந்து 50–60 மீட்டர்கள் (160–200 அடி) தூரத்தில் உள்ளது. சுசுரி அணையில் உள்ள தண்ணீர் நீர்ப் பாசனத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

சுசுரி அணை அதிகாரப்பூர்வ பதிவில் 'மகாவீரர் பந்தாரா' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல நூற்றாண்டு பழமைவாயந்த மகாவீரர் சிற்பம் கோமை ஆற்றில் சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. பாண்டவ லெனி வளாகத்தில் உள்ள மகாவீரர் சிற்பத்திற்கு அருகில் சுசுரி அணை அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Gazetteers Department - DHULIA". Maharashtra.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2010-12-09.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசுரி_அணை&oldid=3205453" இலிருந்து மீள்விக்கப்பட்டது