சுங்கைப் பட்டாணி மணிக்கூட்டுக் கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1936 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சுங்கை பட்டாணி மணிக்கூட்டுக் கோபுரம்

சுங்கை பட்டானி மணிக்கூட்டுக் கோபுரம் (Sungai Petani Clock Tower) மலேசியாவில் கெடா மாநிலத்திலுள்ள கோலா மூடா மாவட்டத்தின் சுங்கைப் பட்டாணி நகரில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

அரியணையில் அமர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சி நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், ஐந்தாம் சியார்ச்சு மன்னரின் வெள்ளி விழாவின் நினைவாக இந்த மணிக்கூண்டு கட்டப்பட்டது. 1936 சூன் 4 அன்று இம்மணிக்கூண்டு திறக்கப்பட்டது.[1][2] இலிம் லீன் டெங் என்ற ஒரு பணக்கார பினாங்கு தொழிலதிபர் நன்கொடை வழங்கினார். மணிக்கூண்டை கட்டிடக் கலைஞர் செவ் எங் என்பவர் வடிவமைத்தார்.[3]

கட்டிடக் கலை[தொகு]

செவ்வக வடிவிலான கடிகார கோபுரம் 60 அடி உயரம் கொண்டதாகும். கடிகாரம் தரையில் இருந்து 40 அடி உயரத்தில் உள்ளது. எழில்படுக் கலைப் பாணியில் கட்டப்பட்ட இம்மணிக்கூண்டு ஏற்கனவே உள்ள கடினமான அடித்தளத்தில் தங்கக் குவிமாடத்தால் மூடப்பட்டுள்ளது.[1] வெண்கல நினைவுத் தகட்டில் இந்த கடிகார கோபுரம் சுங்கே பதானிக்கு திரு. லிம் லீன் டெங்கால் அவரது மாட்சிமை வாய்ந்த மன்னர் ஐந்தாம் சியார்ச்சு மன்னர் 1910 முதல் 1936 வரையிலான ஆட்சியின் நினைவாக வழங்கப்பட்டது என எழுதப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]