சீலா மெக்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீலா மெக்ரா
Shiela Mehra
பிறப்புஇந்தியா
பணிமகளிர் நலவியல்
மகப்பேறியல்
விருதுகள்பத்மசிறீ
இராதா ராமன் விருது
இந்திய மருத்துவ சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது

சீலா மெக்ரா (Shiela Mehra) ஓர் இந்திய மகப்பேறு மருத்துவர் ஆவார். புது தில்லியில் உள்ள மூல்சந்த் மருத்துவமனையில் உள்ள மகளிர் மற்றும் மகப்பேறியல் துறையின் இயக்குநராக உள்ளார்.[1][2] புது தில்லியிலுள்ள லேடி ஆர்டிங் மருத்துவக் கல்லூரியில் 1959 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற இவர், ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ராயல் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவக் கல்லூரியில் மகளிர்நலம் மற்றும் மகப்பேறியலில் பட்டயம் மற்றும் பட்டங்களைப் பெற்றார். இந்திய மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவக் கல்லூரியின் உறுப்பினராகவும் சீலா மெக்ரா உள்ளார்.[1][3] இராதா ராமன் விருது, இந்திய மருத்துவ சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.[1] இந்திய அரசாங்கம் 1991 ஆம் ஆண்டு நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை இவருக்கு வழங்கி சிறப்பித்தது. .[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Dr. Sheila Mehra". Ziffi. 2015. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 7 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Moolchand profile". Moolchand Healthcare. 2015. பார்க்கப்பட்ட நாள் 7 October 2015.
  3. "Health Tourism profile". Health Tourism. 2015. பார்க்கப்பட்ட நாள் 7 October 2015.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீலா_மெக்ரா&oldid=3930008" இலிருந்து மீள்விக்கப்பட்டது