சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை சேலம் மாவட்டத்தில் உள்ளது. சீலநாயக்கன்பட்டியில் அமைத்துள்ள ஊத்துமலை முருகன் கோவில் அப்பகுதி மக்களுக்கு திருத்தலமாக அமைத்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் உயரத்தில் இந்த முருகன் கோயில் உள்ளது[1]. இத்தலம் சுமார் 1000–2000 வருடங்கள் பழமை வாய்ந்தது என்று கருதப்படுகின்றது[2]. இங்குத் தைப்பூச விழா, தமிழ் புத்தாண்டு, கார்திகைத் திருவிழா போன்ற விழாக்கள் சிறப்பாக நடை பெறுகின்றன. மேலும் சீலநாயக்கன்பட்டியில் காலபைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி அன்று சிறப்புப் பூசை நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "சேலம் ஊத்துமலை உச்சியில் திடீர் தீ". தினமணி. 17-04-2011. http://www.dinamani.com/edition_dharmapuri/dharmapuri/article723112.ece. பார்த்த நாள்: 30 அக்டோபர் 2015. 
  2. "ஊத்துமலை அருள்மிகு பால சுப்பிரமணியர் திருக்கோயில்". 15 மே 2012. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2015.