உள்ளடக்கத்துக்குச் செல்

சீர் சரவகைக் காட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீர் சரவகைக் காட்டி (Uniform Type Identifier (UTI)) என்பது, ஆப்பிள் நிறுவனத்தால் வழங்கப்பட்ட மென்பொருள் மீது பயன்படும் உரைச்சரம் (text string) ஆகும். இச்சரமானது மென்பொருளின் வகுப்பு / பிரிவு அல்லது உருப்படியை, தனித்துவமாக அடையாளங்காட்டப் பயன்படுகிறது. கணியச் செயற்பாடுகளான, கணிய முறைமை இலக்குகள், ஆவணங்கள் அல்லது படக்கோப்பு வகைகள், கோப்புரைகள், செயற்பொதிகள், தரப்பிரிப்புத் தரவு, தரவிலிருந்து பிரித்த துண்டுத்தரவுகள், நிகழ்படத் தரவு போன்றவைகளுக்கு உகந்த, ஆப்பிள் அல்லாத நிறுவன மென்பொருள்களின் சீர் சரவகைக் காட்டிகளை ஏற்று, செயற்படவல்ல ஒத்திசைவை, ஆப்பிளின் சீர் சரவகைக் காட்டிகள்(UTIs) தருகிறது. இந்த வசதியை, மாக் கணினி பதிப்பு 10.4 என்பதில் காணலாம்.[1] இந்த சீர் சரவகைக் காட்டிகள், எதிர் ஆட்கள பெயரிடல் குறியீட்டுமுறையைப் (Reverse domain name notation) பயன்படுத்திக் கொள்கிறது.

ஆப்பிளின் அடுக்கதிகாரம்

[தொகு]

கீழ்கண்டவை மிகவும் அடிப்படையான சீர சரவகைக் காட்டிகள் ஆகும்.

காட்டிகள் உறுதியானவை குறிப்பு
public.item இருப்பு அடுக்கதிகாரத்தினுள்ளான அடிவகுப்பு
public.content அனைத்துக் கோப்பு உள்ளடங்களுக்கான அடிவகுப்பு
public.data public.item அனைத்துக் கோப்புகள், ஒட்டுப்பலகை போன்றவகைகளுக்கான அடிவகுப்பு
public.image public.data, public.content அனைத்துப் படங்களுக்கான அடிவகுப்பு

பிற கோப்புவகைக் காட்டிகளையும் கூட, ஆப்பிளின் சீர் சரவகைக் காட்டிகள் அடையாளங்காட்டுகிறது.

காட்டிகள் உறுதியானவை குறிப்பு
public.filename-extension public.case-insensitive-text கோப்பு நீட்சி
public.mime-type public.case-insensitive-text பல்வகை இணைய அஞ்சல் நீட்சி
com.apple.ostype public.text Four-character code (type OSType)
com.apple.nspboard-type public.text NSPasteboard type

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Uniform Type Identifiers Overview". Guides and Sample Code. ஆப்பிள் நிறுவனம். October 29, 2007. பார்க்கப்பட்ட நாள் September 12, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீர்_சரவகைக்_காட்டி&oldid=2469294" இலிருந்து மீள்விக்கப்பட்டது