சீமாட்டி கீன் கல்லூரி
வகை | பொது, மகளிர் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1935 |
அமைவிடம் | , , 25°34′26″N 91°52′52″E / 25.574°N 91.881°E |
சேர்ப்பு | வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.ladykeanecollege.edu.in/ |
சீமாடி கீன் கல்லூரி (Lady Keane College) என்பது 1935-ல் இந்தியாவில் மேகாலயாவின் சில்லாங்கில் அமைந்துள்ள பழமையான மகளிர் பொதுப் பட்ட கல்லூரி ஆகும். வடகிழக்கு இந்தியாவின் முதல் மகளிர் பட்ட கல்லூரியும் இந்தக் கல்லூரிதான். இந்த கல்லூரி வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]
வரலாறு
[தொகு]இக்கல்லூரியின் வரலாறு 1932-ல் தொடங்கியது. அசாமினை சேர்ந்த அதுலானந்தா தாசு எனும் ஓய்வுபெற்ற துணை வனப் பாதுகாவலர், ராய் பகதூர் ஜதீந்திர நாத் சக்ரவர்த்தி எனும் அசாமிய வேளாண்மை இயக்குநர், சில்லாங்கில் மகளிருக்கான கல்வி நிலையம் நிறுவப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து ஆரம்ப பணிகளை மேற்கொண்டனர். இவர்களின் முன்முயற்சியால்தான் 1932-ல் சில்லாங்கில் பள்ளியாக முதலி நிறுவப்பட்டு, சில்லாங் பெண்கள் இடைநிலைக் கல்லூரி என்று 1935ஆம் ஆண்டில் க்ரோவ் சைட் வளாகத்தில் இடைநிலை கலை படிப்புகள் தொடங்கப்பட்டன. வடகிழக்கு இந்தியாவிலேயே முதல் பெண்கள் கல்லூரி என்ற பெருமையையும் பெற்றது. 1938-ல், கல்லூரி கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. 1948-ல், கல்லூரி குவகாத்தி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1973-ல், வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டபோது, சீமாட்டி கீன் கல்லூரி இப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.
துறைகள்
[தொகு]அறிவியல்
[தொகு]- இயற்பியல்
- கணிதம்
- வேதியியல்
- தாவரவியல்
- விலங்கியல்
- உயிர்வேதியியல்
- கணினி அறிவியல்
கலைகள்
[தொகு]- மொழிகள்
- வரலாறு
- கல்வி
- பொருளாதாரம்
- தத்துவம்
- சமூகவியல்
- அரசியல் அறிவியல்
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- "Lady Keane College (LKC) Shillong". ladykeanecollege.edu.in. பார்க்கப்பட்ட நாள் 2017-08-31.