சீமாட்டி அம்ரித்பாய் தாகா மற்றும் திருமதி. ரத்னிதேவி புரோகித் மகளிர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீமாட்டிஅம்ரித்பாய் தாகா மற்றும் திருமதி. ரத்னிதேவி புரோகித் மகளிர் கல்லூரி
வகைதனியார் இளங்கலை மகளிர் கல்லூரி
நிறுவுனர்பெண்கள் கல்விச் சங்கம்
சார்புநாக்பூர் பல்கலைக்கழகம்
தரநிர்ணயம்தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை , பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)
தலைவர்வழக்கறிஞர் சுனில் வி.மனோகர்
முதல்வர்முனைவர் தீபாலி கோட்வால்
அமைவிடம், ,
வளாகம்நகர்ப்புறம்
மொழிஆங்கிலம், இந்தி
இணையதளம்கல்லூரி இணையதளம்

சீமாட்டி அம்ரித்பாய் தாகா மகளிர் கலை,அறிவியல் கல்லூரி மற்றும் திருமதி ரத்னிதேவி புரோஹித் வீட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் மகளிர் கல்லூரி , என்பது மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 1932 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு மகளிர் பொதுப் பட்டக் கல்லூரியாகும்.

கலை மற்றும் வணிகம் மற்றும் அறிவியல், வீட்டு அறிவியல், விடுதி மேலாண்மை போன்ற பிரிவுகளில் பல்வேறு இளங்கலைப் படிப்புகளை பயிற்றுவிக்கும் இக்கல்லூரியானது ராஷ்டிரசந்த் துகாடோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [1]

வரலாறு[தொகு]

1932 முதல் 1935 வரை "மகளிர் கலைக் கல்லூரி" என்றும் 1935 முதல் "மகளிர் மத்திய கல்லூரி" என்றும் அழைக்கப்பட்ட கல்லூரி, 1952 ஆம் ஆண்டில் சேத் பத்ரிதாஸ் தாகாவின் தாயாரின் பெயரிலான நன்கொடை காரணமாக சீமாட்டி அம்ரித்பாய் தாகா மகளிர் கல்லூரி என்று மாற்றப்பட்டது, 1977 ஆம் ஆண்டில் திரு.பன்வாரிலால் புரோஹித்தின் நன்கொடை காரணமாக அவரது தாயாரின் பெயரான திருமதி ரத்னிதேவி புரோஹித் என்பதையும் இணைத்து தற்போதுள்ள பெயர் பெற்றுள்ளது.

துறைகள்[தொகு]

  • மராத்தி
  • ஆங்கிலம்
  • இந்தி
  • வரலாறு
  • உளவியல்
  • அரசியல் அறிவியல்
  • பொருளாதாரம்
  • சமஸ்கிருதம்
  • சமூகவியல்
  • நிலவியல்
  • தத்துவம்
  • உணவு அறிவியல்
  • வீட்டு மேலாண்மை
  • வீட்டு அறிவியல்
  • உடற்கல்வி
  • கணினி அறிவியல்
  • மேலாண்மை
  • வர்த்தகம்

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் 'ஏ' தரச்சான்றும் பெற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Affiliated College of Rashtrasant Tukadoji Maharaj Nagpur University" (PDF).