சீனிவாசப்பெருமாள் கோயில், பாபநாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுழைவாயில்

சீனிவாசப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில்அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும். [1] [2]

அமைப்பு[தொகு]

தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் பாபநாசம் நகரில் அமைந்துள்ள இக்கோயிலின் கிழக்கு வாயிலில் மூன்று நிலை கோபுரம் உள்ளது. [3] இக்கோயிலில் இரு திருச்சுற்றுகள் உள்ளன. கோயிலின் அருகில் கோயில் குளம் உள்ளது.[4]

விழாக்கள்[தொகு]

இக்கோயிலில் திருவோணம் ஆடி பௌர்ணமி (சூலை-ஆகஸ்டு), தை பௌர்ணமி (சனவரி-பிப்ரவரி), அனுமன் செயந்தி, வைகுண்ட ஏகாதசி, விநாயகர் சதுர்த்தி (ஆகஸ்டு-செப்டம்பர்), நவராத்திரி (செப்டம்பர்-அக்டோபர்) போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.-[3]

குடமுழுக்கு[தொகு]

இக்கோயிலின் குடமுழுக்கு 2017இல் நடைபெற்றது.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]