சீனாவில் அருமண் தொழிற்சாலை
சீனாவில் அருமண் தொழிற்சாலை (The rare earth industry in China) மிகப்பெரிய மற்றும் முக்கியமான தொழிற்துறையாக உள்ளது. மின்சாரம் அல்லது கலப்பின வாகனங்கள், காற்றுச் சுழலிகள், அன்றாட மின்னணு சாதனங்கள் மற்றும் மாசில்லா ஆற்றல் தொழில்நுட்பங்கள் ஆகியனவற்றில் இத்தொழிற்சாலைகளில் கிடைக்கும் தனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன[1]. அருமண் கனிமங்கள் என்பவை 17 தனிமங்கள்[2] அடங்கியுள்ள ஒரு தொகுதியாகும். இவை பூமியில் குறைவான செறிவில் காணப்படுகின்றன. இவற்றைப் பிரித்தெடுப்பதற்கு அதிக பொருட் செலவும் பிடிக்கும்[3].
உலகம் முழுவதும் நடைபெறும் அருமண் கனிம வர்த்தகத்தில் சீனாவின் அருமண் தொழில் வர்த்தகம் 97 சதவீதம் ஆகும்[4][5]. உலகின் அருமண் கனிமங்களின் இருப்பு வைப்பு 99 மில்லியன் டன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது[6]. இதில் சீனாவின் இருப்பு மட்டும் 36 மில்லியன் டன்கள் அதாவது உலகின் அருமண் கனிம இருப்பில் 30 சதவீதம் ஆகும்[6] . சீன அரசாங்கம் உள்நாட்டுத் தேவையின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு ஏற்றுமதியை 16,304 டன்களில் இருந்து 14,446 டன்களாகக் குறைத்திருக்கிறது.
வரலாறு
[தொகு]இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே சீனா அருமண் தொழிலில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது. உள்நாட்டில் இத்தனிமங்களை சிக்கனமாகத் தயாரிக்கும் வகையில் நாட்டின் சுற்றுச்சூழல் ஒழுங்கு முறைகளை சீனா தயாரித்துக் கொண்டுள்ளது[7]. உலக அருமண் தனிமங்கள் உற்பத்தியில் சீனாவின் பங்கு அதிகமானதாக இருந்தாலும், ஏராளமான எண்ணிக்கையிலான உற்பத்தியாளர்களின் குறைவான உற்பத்தி வெளியீடாகவே அமைகிறது[8].
சீனாவில் அருமண் தொழில் 1986 இல் திட்டம் 863 என்ற திட்டத்தின் மூலமாகத் தொடங்கியது. தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சிகள் அதிகரிப்பு வழியாக நாட்டின் நாட்டின் பொருளாதாரத்தை சிக்கனமாகவும் நுணுக்கமாக்வும் முன்னேற்றும் விதமாக உந்தித்தள்ளுவது இத்திட்டத்தின் நோக்கமாகும்[9] . இதைத் தவிர திட்டம் 973 என்ற திட்டமும் துவக்கப்பட்டது. அருமண் தொழிலை முன்னெடுக்கும் அடிப்படை அறிவியல் ஆய்வுகளை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்[9].
2002 ஆம் ஆண்டில்,சீனாவின் மத்திய அரசாங்கம் உள்நாட்டு அருமண் தொழிலை மறுசீரமைப்பு செய்ய முடிவெடுத்தது. இதன் தொடர்ச்சியாக வடக்கு சீனா அருமண் குழும நிறுவனம், தெற்கு சீனா அருமண் குழும நிறுவனம் என்ற அரசாங்கத்திற்குச் சொந்தமான இரண்டு நிறுவனங்களை உருவாக்கியது[8]. உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் சக்திவாய்ந்த உள்ளூர் அதிகார அமைப்புகளின் எதிர்ப்பால் இச்சீரமைப்புத் திட்டம் தோல்வியில் முடிந்தது[8] . கடுமையான தொழிற் போட்டியின் காரணமாக உள்ளூரில் தரம் குறைந்த பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. குறைவான இலாபம் ஈட்டப்பட்டது. இதனால் தொழிலில் நலிவடையாமல் நிலைத்து நிற்க உற்பத்தியாளர்கள் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது[8]. அரசாங்கம் சாதிக்க முடியாத ஒருங்கிணைப்பை வர்த்தகம் சாதித்தது.
சூ குவாங்சியன் சீனாவின் அருமண் தொழில் நிறுவனத்தின் தந்தையாக கருதப்படுகிறார். தொன்னூறுகளின் ஆரம்பத்தில் இவர் சீனாவின் மூலோபாய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை அருமண் தொழில் நுட்பத்தில் பயன்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இதனால்தான் சீனா அருமண் தனிமங்களின் வலுநிலையம் ஆனது[9]. சீன இயற்கை அறிவியல் அடித்தளத்தின் உறுப்பினர், சீன அறிவியல் கழகத்தின் முன்னாள் தலைவர் மற்றும் சீன வேதியியல் கழகத்தின் முன்னாள் தலைவர் ஆகிய பொறுப்புகளையும் சூ குவாங்சியன் வகித்துள்ளார்[9].
அருமண் தனிமங்களின் ஏற்றுமதியை சீனா குறைத்து விட்டதால் அவற்றின் விலை அளவுக்கு அதிகமாக உயர்ந்தது. சட்டத்திற்கு புறம்பான பல சுரங்கங்கள் தோன்றி வர்த்தகத்தில் இலாபம் ஈட்ட ஆரம்பித்துள்ளன[10]. சில திட்டமிட்ட அமைப்புகள் கடத்தல் போன்ற சமூக விரோத செயல்களால் சீனநாட்டிற்கு தீங்கிழைக்கும் நச்சுகளாய் உருவாகியுள்ளனர். இவர்களால் சீனாவின் அருமண் இருப்பு விரைவாக குறைக்கப்படுகிறது[11]. 2008 ஆம் ஆண்டில் மட்டும் இத்தகையவர்களால் ஏற்றுமதி செய்யப்பட்டவை 20000 டன்கள் அருமண் தனிமங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.[11]
உலக அருமண் தனிமங்கள் இருப்பில் சீனாவில் மட்டும் 36 சதவீதம் இருப்பு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது கவனிக்கத் தக்கது.[12]
சீன கட்டுப்பாடுகளாலும் அவர்களையே அதிகமாக சார்ந்து இருக்க வேண்டியிருப்பதாலும் மற்றநாடுகளில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் மாற்று வழிகளைத் தேட முற்பட்டன. புதியதாக சுரங்கங்களை உருவாக்கி யப்பானைப் போல அவற்றை தேவைக்கேற்ப பெருமளவில் தயாரிப்பதற்கான வழிகளை ஆய்வுசெய்கின்றன[13]. லைனாசு நிறுவனம் மற்றும் ஆத்திரேலிய ஆல்க்கேன் மூலங்கள் என்ற சீனநாடல்லாத பிறநாட்டு நிறுவனங்கள் இத்தொழிலில் ஒரளவு இலாபம் ஈட்டி வருகின்றன[13]. கலிபோர்னியாவின் மௌண்டைன் பாசு சுரங்கம் சீனாவுடன் போட்டியிட முடியாமல் 2002 இல் சுரங்கத்தை இழுத்து மூடியது. தற்பொழுது மாலிகார்ப் என்ற பெயரில் மறுபடியும் சுரங்கத்தைத் துவக்கியுள்ளது.[14]
சீன அருமண் தொழிற்சாலைகள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கப் போவதாக சீன அதிகார அமைப்புகள் தெரிவித்தன. அருமண் தனிமங்களை வாங்கும் வெளிநாட்டினருக்கு இவ்வமைப்பு மூலமாக ஒருங்கிணைந்த விலையை நிர்ணயம் செய்யப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டது[15][16]. வாங் கெய்ஃபெங் இவ்வமைப்பின் தலைவராகச் செயல்படுவார் என்றும் 2011 முதல் இவ்வமைப்பு நிறுவப்படும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது[15][17]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "China may not issue new 2011 rare earths export quota: report". Reuters. 31 December 2010. http://www.reuters.com/article/idUSTRE6BU04S20101231.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-01-18. பார்க்கப்பட்ட நாள் 2015-11-21.
- ↑ "Rare-Earth Elements (REE)". www.globalsecurity.org.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ People's Daily Online (January 7, 2011). "New standards for rare earth sector".
- ↑ "Germany urges China review rare metals policy". 8 January 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 6.0 6.1 Anil Das (January 7, 2011). "2011 spells desperate search for rare earth minerals". International Business Times.
- ↑ William J. Broad (November 8, 2010). "Mining the Seafloor for Rare-Earth Minerals". New York Times. http://www.nytimes.com/2010/11/09/science/09seafloor.html.
- ↑ 8.0 8.1 8.2 8.3 "Rare-Earth Elements (REE) Industry". www.globalsecurity.org.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ 9.0 9.1 9.2 9.3 Cindy Hurst (March 2010). "China's Rare Earth Elements Industry: What Can the West Learn?" (PDF). Institute for the Analysis of Global Security (IAGS).
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ Keith Bradsher (December 29, 2010). "In China, Illegal Rare Earth Mines Face Crackdown". New York Times. http://www.nytimes.com/2010/12/30/business/global/30smuggle.html.
- ↑ 11.0 11.1 "Smuggling key factor in China's rare earth actions". Royal Society of Chemistry. 29 October 2010.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ Suzanne Goldenberg (26 December 2010). "Rare earth metals mine is key to US control over hi-tech future: Approval secured to restart operations, which could be crucial in challenging China's stranglehold on the market". London: www.guardian.co.uk. http://www.guardian.co.uk/environment/2010/dec/26/rare-earth-metals-us.
- ↑ 13.0 13.1 Nicolas Perpitch (December 31, 2010). "Western Australia sees bonanza in Chinese move". The Australian.
- ↑ Suzanne Goldenberg (January 1, 2011). "US digs deep to secure the technology of the future". smh.com.au. http://www.smh.com.au/environment/us-digs-deep-to-secure-the-technology-of-the-future-20101231-19bz7.html.
- ↑ 15.0 15.1 "China setting up rare earth industry group". chinapost.com.tw. December 29, 2010. Archived from the original on மார்ச் 6, 2016. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 21, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); External link in
(help)|publisher=
- ↑ Luo (2010-12-28). "China to Set up Rare Earth Industry Group". CRIENGLISH.com. Archived from the original on 2018-01-26. பார்க்கப்பட்ட நாள் 2015-11-21.
- ↑ Agence France-Presse (Dec 28, 2010). "China Setting Up Rare Earth Industry Group". industryweek.com.
{{cite web}}
: External link in
(help)|publisher=
புற இணைப்புகள்
[தொகு]- Chinese Society of Rare Earths (CSRE) (ஆங்கிலம்) (சீனம்)
- News about Rare earth industry in China பரணிடப்பட்டது 2014-11-24 at the வந்தவழி இயந்திரம்