உள்ளடக்கத்துக்குச் செல்

சீனத் அப்துல்லா சானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீனத் அப்துல்லா சானா (Zeenat Abdullah Channa) ஜனவரி 4, 1919 - ஜூலை 12, 1974) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு கல்வியாளர் மற்றும் எழுத்தாளராவார். பாக்கித்தானின் சிந்து மாகாணத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமான செவான் செரிப்பு நகரத்தில் இவர் பிறந்தார். 1947 ஆம் ஆண்டில் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு சிந்தி மொழியில் கதைகளை எழுதிய முதல் பெண் எழுத்தாளர்களில் இவரும் ஒருவராவார். மாத இதழான மார்வியின் ஆசிரியராக சீனத் அப்துல்லா பணியாற்றினார். கிராமப்புற சிந்து மாகாணத்தைச் சேர்ந்த பெற்றோர்களை தங்கள் பெண்களுக்கு கல்வி கற்பிக்குமாறு ஊக்குவித்தார். ஆசிரியராகவும் கதை எழுத்தாளராகவும் சீனத் இருந்தார். இலக்கியக் கட்டுரைகளையும் இவர் எழுதினார். [1]

குழந்தை பருவம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

சீனத் அப்துல்லா சானா 1919 ஆம் ஆண்டு பாக்கித்தானின் சிந்து மாகாணம் இயாம்சோரோ மாவட்டத்தின் செவான் செரீப்பு நகரத்தில் சீனத் பிறந்தார். இவரது தந்தை முகம்மது சலே சானா ஒரு தபால் அலுவலராக பணிபுரிந்தார். இவரது இளைய சகோதரர் மகபூப் சானா அறிஞராகவும் புகழ்பெற்ற எழுத்தாளராகவும் புகழ் பெற்றிருந்தார். சீனத் தனது சொந்த ஊரான செவானிலும் பின்னர் ஐதராபாத்து மகளிர் பயிற்சிக் கல்லூரியிலும் படித்தார். [2] செவான் செரீப்புக்கு அருகில் உள்ள டால்டி என்ற ஊரில் பள்ளி ஆசிரியையாக சீனத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இறுதியில் ஒரு தலைமை ஆசிரியையாகப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவரது கற்பித்தல் வாழ்க்கையில் சீனத் எப்போதும் இளம் பெண்களை கல்விக்காக ஊக்குவித்தார்.

இவர் 13 ஆகஸ்ட் 1944 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 13 ஆம் தேதியன்று அப்துல்லா கான் சானாவை மணந்து கொண்டார். இவரது கணவர் சேவானின் துணை ஆட்சியராக பணிபுரிந்து கொண்டிருந்தார்.[3] சீனத்தின் கணவர் ஓர் ஆராய்ச்சியாளராகவும் எழுத்தாளராகவும் இருந்தார்.

இலக்கிய பங்களிப்புகள்

[தொகு]

சீனத் சானா 1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினைக்குப் பிறகு சிந்தி மொழியில் கதைகள் எழுதி சிறந்த சிந்தி மொழி எழுத்தாளர்களில் ஒருவர் என்று புகழ் பெற்றார். இவரது கதைகள் மெகரான் மற்றும் நயின் சிந்தகி உள்ளிட்ட புகழ்பெற்ற சிந்தி இதழ்களில் வெளியிடப்பட்டன.

மெக்ரான் என்பது சிந்தி அடாபி வாரியத்தின் காலாண்டு இலக்கிய இதழாகும். 1947 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாக்கித்தானின் பழமையான பத்திரிகையாஆகும். ஆயிரக்கணக்கான மெக்ரான் பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த காலான்டு இதழ் அனைத்து சிந்தி இலக்கியவாதிகளையும் பற்றி அதன் பதிப்புகளில் எழுதுகிறது. மெக்ரான் புதிய எழுத்தாளர்களுக்கு எழுதுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது மற்றும் பல பிரபல அறிஞர்கள் பத்திரிகையில் எழுதுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர்.

சீனத் பல நல்ல தரமான இலக்கியக் கட்டுரைகள் மற்றும் படைப்புகளை எழுதியுள்ளார். ரண்டிகோ (பொம்மை), ஓன்டாகி (இருள்) மற்றும் மிதி (இனிப்பு) ஆகியவை இவருடைய சிறந்த கதைகளில் சிலவாகும். வாசகர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த "மார்வி" என்ற மாதாந்திர பெண்கள் இதழின் ஆசிரியராக சீனத் பணியாற்றினார். [4] 1958 ஆம் ஆன்டில் யாத்கர் இ லத்தீஃப் என்ற புத்தகத்தை இவர் தொகுத்தார்.

இறப்பு

[தொகு]

1974 ஆம் ஆண்டு சூலை மாதம் 12 ஆம் நாளன்று சீனத் காலமானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Qāz̤ī K̲h̲ādimu (2007). The Glorious Past. Kavita Publications. p. 60. பார்க்கப்பட்ட நாள் 21 August 2020.
  2. "چنا زينت : (Sindhianaسنڌيانا)". encyclopediasindhiana.org (in சிந்தி). பார்க்கப்பட்ட நாள் 21 March 2020.
  3. اسان جو قلم ـ ھڪ علم.
  4. Sindhipeoples (15 April 2012). "سنڌي شخصيتون: جيجي زينت چنه سيوهاڻي – علي اصغر اوٺو". سنڌي شخصيتون. பார்க்கப்பட்ட நாள் 21 March 2020.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனத்_அப்துல்லா_சானா&oldid=3277966" இலிருந்து மீள்விக்கப்பட்டது