ஜாம்சோரோ மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஜாம்சோரோ மாவட்டம்
ضلعو ڄامشورو
மாவட்டம்
சிந்து மாகாணத்தில் ஜாம்சோரோ மாவட்டத்தின் அமைவிடம்
சிந்து மாகாணத்தில் ஜாம்சோரோ மாவட்டத்தின் அமைவிடம்
நாடுபாகிஸ்தான்
மாகாணம்சிந்து மாகாணம்
Headquartersஜாம்சோரோ
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்1,176,969
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)
வருவாய் வட்டங்கள்5
இணையதளம்www.jamshoro.gos.pk


ஜாம்சோரோ மாவட்டம் (Jamshoro District) (சிந்தி மொழி: ضلعو ڄام شورو‎), (உருது: ضِلع جامشورو), தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் ஐதராபாத் கோட்டத்தின் ஆறு மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் மாவட்டத் தலைமையிடம் ஜாம்சோரோ நகரம் ஆகும். இம்மாவட்டம் சிந்து ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

டிசம்பர் 2004-இல் தாது மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு ஜாம்சோரோ மாவட்டம் துவக்கப்பட்டது.

மாவட்ட எல்லைகள்[தொகு]

ஜாம்சோரோ மாவட்டத்தின் வடக்கில் தாது மாவட்டமும், கிழக்கில் சிந்து ஆறு நவாப் ஷா, மத்தியாரி மற்றும் ஐதராபாத் மாவட்டங்களைப் பிரிக்கிறது. தெற்கில் தத்தா மாவட்டமும் மற்றும் தென்மேற்கில் கராச்சி மாவட்டமும், மேற்கில் பலுசிஸ்தான் மாகாணத்தின்]] லஸ்பெல்லா மாவட்டமும் உள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

11,517 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஜாம்சோரோ மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மதிப்பீட்டின் படு, மக்கள் தொகை 1,176,969 ஆக உள்ளது. [2]மக்கள் தொகை வளர்ச்சி (1981-1998) 2.57% ஆக உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 89 ஆக உள்ளது. இம்மாவட்டத்தின் முதல் மொழியான சிந்தி மொழியை 83.86% மக்கள் பேசுகின்றனர். உருது மொழியை 6.28% மக்களும், பஞ்சாபி மொழியை 4.17% மக்களும், பஷ்தூ மொழியை 3.31% மக்களும் பேசுகின்றனர். [3]

பொருளாதாரம்[தொகு]

இம்மாவட்டத்தின் பொருளாதாரம் வேளாண்மைச் சார்ந்து உள்ளது. இங்கு கோதுமை, நெல், கரும்பு, வாழை முக்கியப் பயிர்களாக பயிரிடப்படுகிறது. மாவட்டத்தின் 20% மக்கள் மாகாண அரசிலும், பாகிஸ்தான் நடுவண் அரசிலும் ஊழியம் செய்கின்றனர்.

நூரியாபாத் மற்றும் கோட்டிரி தொழிற்சாலைகள் வளாகங்களில் ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளது. கோட்டிரி அனல் மின் நிலையம், மாவட்டத்திற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

கல்வி[தொகு]

ஜாம்சோரோ மாவட்டத்தில் மெக்ரான் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பல்கலைக்கழகம், லியாகத் மருத்துவம் மற்றும் சுகாதாரப் பல்கலைக்கழகங்கள் உள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

ஜாம்சோரோ மாவட்டத்தின் நிர்வாக வசதிக்காக கோட்டிரி, ஜாம்சோரோ, செக்வான் செரீப், தானா புல்லா கான் மற்றும் மஞ்சண்ட் என ஆறு வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆதார நூற்பட்டியல்[தொகு]

  • 1998 District census report of Dadu. Census publication. 82. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 2000. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாம்சோரோ_மாவட்டம்&oldid=3287243" இலிருந்து மீள்விக்கப்பட்டது