சீதா பின்ட் பகத் அல் தாமிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீதா பின்ட் பகத் அல் தாமிர்
பிறப்புசூன் 25, 1922(1922-06-25)
இறப்பு25 திசம்பர் 2012(2012-12-25) (அகவை 90)
ரியாத், சவுதி அரேபியா
துணைவர்சவுதி அரேபியாவின் காலித்
குடும்பம்உறுப்பினர்
பட்டியல்
 • இளவரசி ஜவ்ரா
 • இளவரசி நௌஃப்
 • இளவரசி மௌடி
 • இளவரசி ஹுசா
 • இளவரசி அல் பண்டாரி
 • இளவரசர் மிஷால்
 • இளவரசர் பைசல்
மரபுசௌதி கொடி வழி (திருமணம் மூலம்)
தந்தைஃபஹத் பின் அப்துல்லா அல் தாமிர்
தாய்ரைசா ஷெஹிதன் அல் டேன் அல் அஜாமி

சீதா பின்ட் பகத் அல் தாமிர் (ஆங்கிலம்:Seeta bint Fahd Al Damir; அரபு மொழி: صيتة بنت فهد الدامر‎ ; 25 சூன் 1922 - 25 திசம்பர் 2012) சவுதி அரேபியாவின் மன்னர் காலித்தின் மனைவிகளில் ஒருவர்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சீதா பின்ட் பகத் அல் பதியாவில் உள்ள அஜ்மான் பழங்குடியினரின் உறுப்பினராகவும்,[1] அப்துல்லா பின் ஜிலுவியின் மனைவியான வஸ்மியா அல் டாமிரின் மருமகளாகவும் இருந்தார்.[2] இவரது பெற்றோர்கள் பகத் பின் அப்துல்லா அல் தாமிர் மற்றும் ரைசா ஷெஹிதன் அல் டேன் அல் அஜாமி. இவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் இருந்தனர்.[2] இவரது சகோதரர் அப்துல்லா பின் பகத், அஜ்மான் பழங்குடியினரின் யூதா குடியேற்றத்தின் தலைவராக இருந்தார்.[3]

சொந்த வாழ்க்கை[தொகு]

சீதா பின்ட் பகத் மன்னன் காலித்தை மணந்தார். இவர்களுக்கு ஏழு குழந்தைகள் இருந்தனர்: ஜவ்ஹாரா, நௌஃப், மௌதி, ஹுசா, அல் பண்டாரி, மிஷால் மற்றும் பைசல் ஆவர். இவரது மகள், மௌடி பின்ட் காலித், 2013 மற்றும் 2016க்கு இடையில் ஆலோசனை சபையின் உறுப்பினராக இருந்தார்.

இறப்பு[தொகு]

சீதா பின்ட் பகத் 25 திசம்பர் 2012 அன்று ரியாத்தில் இறந்தார்.[4][5] 26 திசம்பர் 2012 அன்று ரியாத்தில் உள்ள இமாம் துர்கி பின் அப்துல்லா மசூதியில் அப்துல்லாஜிஸ் அல் அஷெய்க் தலைமையில் அசர் தொழுகைக்குப் பிறகு, பட்டத்து இளவரசர் சல்மான் பின் அப்துல்லாஜிஸ் உட்படச் சவுதியின் மூத்த அதிகாரிகளின் வருகையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.[6][7]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Wasmiyah al Damir Biography". Datarabia. 30 December 2012 அன்று பார்க்கப்பட்டது.
 2. 2.0 2.1 "صيتة الدامر "أم الأيتام" وزوجة الملك وأخت الشيوخ" (in ar). Alasmeh News. 3 December 2018. Archived from the original on 15 மே 2021. https://web.archive.org/web/20210515203057/https://alasmeh.com/31578-2/. 
 3. Mohammed Suleiman Al Haddad (1981). The Effect of Detribalization and Sedentarization on the Socio-Economic Structure of the Tribes of the Arabian Peninsula: Ajman Tribe as a Case Study (PhD thesis). University of Kansas. p. 87. ProQuest 303145966.
 4. "Death of Princess Sita bint Fahd". Saudi Press Agency. 25 December 2012. Archived from the original on 30 டிசம்பர் 2013. https://web.archive.org/web/20131230234654/http://www.spa.gov.sa/English/readsinglenews.php?id=1062762&content_id=&scroll=1. 
 5. "His Majesty sends cable of condolences". Times of Oman. 26 December 2012. https://go.gale.com/ps/retrieve.do?tabID=T004&resultListType=RESULT_LIST&searchResultsType=SingleTab&hitCount=960&searchType=BasicSearchForm&currentPosition=87&docId=GALE%7CA313109566&docType=Brief+article&sort=Relevance&contentSegment=ZNEW-FullText-Exclude-FT&prodId=STND&pageNum=5&contentSet=GALE%7CA313109566&searchId=R1&userGroupName=wikipedia&inPS=true. 
 6. "Crown prince attends funerals of Prince Turki, Princess Seeta". Arab News. 27 December 2012. http://www.arabnews.com/crown-prince-attends-funerals-prince-turki-princess-seeta. 
 7. "Funeral prayers for Turki bin Sultan". Saudi Gazette. 27 December 2012. http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20121227147268.