சௌதி கொடி வழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சௌதி கொடி வழி (House of Saud) என்பது தற்போதைய சௌதி அரேபியாவின் அரசர்கள் வரும் கொடி வழியாகும். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள், முதல் சௌதி அரசு (1818-1891) என அறியப்படும் திரியா அமீரகத்தை நிறுவிய முகமது பின் சௌத் மற்றும் அவரது சகோதரர்கள் வழி வந்தவர்கள். எனினும், ஆளும் குடும்பப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தற்போதைய சௌதி அரேபியாவை நிறுவிய இபின் சௌத்தின் (Ibn Saud) வழித்தோன்றல்களாகவே உள்ளனர்.[1]

தற்போது சௌதி அரேபியா அரச குடும்பத்தில் மிகவும் செல்வாக்கு மிக்கவர் தற்போதைய சௌதி அரேபியாவின் அரசர் சல்மான் ஆவார். சௌதி அரேபியாவின் அரசபதவி முகமது பின் சௌதின் மகன்களில் ஒருவருக்குத்தான் கிடைக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவின் அடுத்த அரசர் பட்டத்து இளவரசர் முகமது பின் நயிப் ஆவார். இவரும் சௌதி கொடி வழி வந்தவரே என்பது குறிப்பிடத்தக்கது. அரசரால் அமர்த்தப்பட்ட சௌதி அரசின் ஆய அமைச்சர்களில் பெரும்பாலோர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது அரசபதவி மரபுவழியாக வருவது என்றாலும் எதிர்காலத்தில் அரசர்களை சௌதி இளவரசர்கள் அடங்கிய குழு தேர்ந்தெடுக்கும் என்று 2006இல் பிறப்பிக்கப்பட்ட அரச கட்டளை தெரிவிக்கிறது.[2]

இக்கொடி வழி வந்தவர்கள் 15,000 இக்கும் மேல் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலான அதிகாரங்களும் செல்வமும் 2,000 குடும்ப உறுப்பினர்களிடம் மட்டுமே உள்ளது.[3][4]

சௌதி கொடி வழி வந்த அரசுகள் மூன்று. 1714-1818 முதலான திரியா அமீரகம் என்பது முதல் சௌதி அரசாகும். இதில் தீவிர இசுலாமிய பிரிவான வகாபியிசம் வளர்ந்தது. 1824-1891 வரை இருந்த நசத் அமீரகம் இரண்டாவது சௌதி அரசாகும், இக்காலத்தில் நிறைய அரச குடும்ப சண்டைகள் நிகழ்ந்தன. மூன்றாவது 1932 முதல் தற்போது வரை உள்ள சௌதி அரேபிய அரசாகும். இது மத்திய கிழக்கில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்துகிறது. உதுமானியப் பேரரசுடன் சௌதி கொடி வழி வந்தவர்களுக்கு பிணக்கு உள்ளது. மெக்காவின் காவலர், ரசீத் கொடி வழியில் வந்த சபல் சாம்மர் அமீரகத்தை ஆண்ட ரசீத் குடும்பத்தினருடனும் நசத் இனத்தின் பல குழுக்களுடனும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள எண்ணற்ற இசுலாமிய குழுக்களுடனும் இவர்களுக்கு பிணக்கு உள்ளது.


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌதி_கொடி_வழி&oldid=2263470" இருந்து மீள்விக்கப்பட்டது