உள்ளடக்கத்துக்குச் செல்

சீதா சோரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீதா சோரன்
ஜார்க்கண்டின் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2009
முன்னையவர்சுனில் சோரன்
தொகுதிஜாமா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
துணைவர்துர்கா சோரன்
உறவுகள்சிபு சோரன் (மாமனார்) (ஏமந்த் சோரன்) மைத்துனர்

சீதா முர்மு என்ற சீதா சோரன் (Sita Murmu alias Sita Soren) ஒரு இந்திய அரசியல்வாதியும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவரும் ஆவார். ஜார்கண்ட் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக ஜாமாவில் இருந்து பணியாற்றுகிறார். இவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் சிபு சோரனின் மருமகளும் மறைந்த துர்கா சோரனின் மனைவியும் ஆவார். [1] [2] 2012 மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்க பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு ஏழு மாதங்கள் சிறையில் -. தற்போது பிணையில் வெளியே வந்துள்ளார். [3]

அரசியல்

[தொகு]

2009-ல் சார்க்கண்டில் உள்ள ஜாமா சட்டமன்றத் தொகுதியிலிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தேசியப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டு சார்க்கண்டு சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019 இல், சார்க்கண்டில் உள்ள ஜாமா தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றார். [4].

19 மார்ச் 2024 அன்று, இவர் தனது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் அனைத்து பதவிகளையும் விட்டு விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sita Murmu Alias Sita Soren(JMM):Constituency- JAMA (ST)(DUMKA ) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-06-22.
  2. "Who Is Sita Soren? Three-Time MLA And Daughter-In-Law Of Shibu Soren". www.shethepeople.tv. Archived from the original on 2022-06-22. பார்க்கப்பட்ட நாள் 2022-06-22.
  3. "Sita Soren gets bail in horse-trading case | India News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  4. "Sita Murmu Alias Sita Soren(JMM):Constituency- JAMA (ST)(DUMKA ) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதா_சோரன்&oldid=4108381" இலிருந்து மீள்விக்கப்பட்டது