சீட்டாட்டம்
சீட்டாட்டம் வழமையான சீட்டுகளையோ தனிப்பட்ட சீட்டுக்களையோ கொண்டு விளையாடப்படும் ஆட்டம் ஆகும். பலவிதமான சீட்டாட்டங்கள் விளையாடப்படுகின்றன. வழமையான சீட்டுக்கட்டுகளைக் கொண்டு விளையாடப்படும் ஆட்டங்களுக்கு சீர்தரப்படுத்தப்பட்ட விதிமுறைகள் உள்ளன. இருப்பினும் பலவகை சீட்டாட்டங்கள் இனம், பண்பாடு, நாடு/ நிலப்பகுதி, குழுக்கள் என்பதைப் பொறுத்து வெவ்வேறான விதிமுறைகளுடன் விளையாடப்படுகின்றன.
தவிர சீட்டாட்டம் என வகைபடுத்தப்படாத பல ஆட்டங்களில் சீட்டுக்கள் பயன்படுத்தப்படுவதும் உண்டு. அதேபோல சீட்டாட்டமாக கருதப்படும் சில ஆட்டங்களில் அட்டையும் பயன்படுத்தப்படுகிறது. முதன்மையான வரையறையாக சீட்டாட்டத்தில் ஆடுபவர்கள் சீட்டுக்களைப் பயன்படுத்துவதே ஆகும்; அட்டைகள் பெரும்பாலும் ஆட்டப்புள்ளிகளை குறித்துக்கொள்ளவும் சீட்டைப் பரிமாறவும் பயனாகின்றன. மாறாக சீட்டுக்கள் பயன்படுத்தப்படும் அட்டை ஆட்டங்களில் பொதுவாக அட்டையில் ஆடுபவரின் இடத்தைக் கொண்டு ஆடப்படுகின்றன; சீட்டுக்கள் இரண்டாம் நிலை பயன்பாட்டிற்கே பயனாகின்றன.
சில பரவலான சீட்டாட்டங்கள்
[தொகு]- ரம்மி[1]
- 304 சீட்டு ஆட்டம்
- பிரிட்ஜ்
- கழுதை ஆட்டம்
- மங்காத்தா அல்லது மூணு சீட்டு
- *போக்கர்
- 28
- சாலிடைர்
- பிரீசெல்