உள்ளடக்கத்துக்குச் செல்

சி வரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி வரிசை (C band) என்பது மின்காந்த (electromagnetic spectrum) அலைவரிசையில் 4 GHz முதல் 8 GHz வரையிலான அதிர்வெண்களைக் கொண்டவை என மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் கழகம் வரையறை செய்துள்ளது. இவை நீண்ட தூரத் தகவல் தொடர்புக்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. செயற்கைக் கோள் தகவல் தொடர்பு, கம்பியில்லா தொலைபேசி, வைஃபை, காலநிலை ரேடார் கருவி போன்றவற்றில் உபயோகப்படுகின்றன. சி வரிசை அதிர்வெண் அலைவரிசை செயற்கோள் தகவல் தொடர்பில் கேயூ வரிசையை விட சிறப்பாக செயல்படுகிறது. மோசமான பருவ நிலைக் காலங்களில் கேயூ வரிசை அலைவரிசையின் தரம் குறையும். ஆனால் சி வரிசை அலைவரிசையானது எந்த விதத் தரக்குறைவும் இல்லாமல் இருக்கிறது.[1]

சி வரிசையின் வகைகள்[தொகு]

உலகம் முழுவதிலுமுள்ள சி வரிசை அலைவரிசையின் வகைகள்
வரிசை அனுப்புதல் அதிர்வெண்
(GHz)
பெறுதல் அதிர்வெண்
(GHz)
நிலையான சி வரிசை 5.850–6.425 3.625–4.200
நீட்டிக்கப்பட்ட சி வரிசை 6.425–6.725 3.400–3.625
இன்சாட் / மிகவும் நீட்டிக்கப்பட்ட சி வரிசை 6.725–7.025 4.500–4.800
ரஷ்யாவின் சி வரிசை 5.975–6.475 3.650–4.150
எல்.எம்.ஐ (LMI) சி வரிசை 5.7250–6.025 3.700–4.000

மேற்கோள்கள்[தொகு]

  1. What is C Band page from tech-faq (accessed Aug. 14, 2008)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி_வரிசை&oldid=3850486" இலிருந்து மீள்விக்கப்பட்டது