சி. தியாகராசர்
சி. தியாகராசச் செட்டியார், தமிழறிஞர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணாக்கரும், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் தமிழாசிரியராக பணியாற்றியவர..[1]
பிறப்பு
[தொகு]திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம், பூவாளூரில் 1826 ஆம் ஆண்டில் சிதம்பரம் செட்டியார் என்பவருக்கு மகனாகப் பிறந்தார்.
கல்வி
[தொகு]தியாகராசர் திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றில் எண்ணையும் எழுத்தையும் தொடக்கக் கல்வியாகப் பெற்றார். பின்னர் தனது ஊருக்கு அருகில் வாழ்ந்த தமிழறிஞர்களிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.
1844 ஆம் ஆண்டில் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் மாணவராகச் சேர்ந்து இலக்கியமும், இலக்கணமும் பயின்றார்.
பணி
[தொகு]தமிழிலக்கியத்தில் போதிய பயிற்சி பெற்றதும் மீனாட்சி சுந்தரனாரிடமே ஓலை எழுதுவோராகவும் மாணவர்களுக்குத் தொடக்கப் பாடங்களைக் கற்பிக்கும் சட்டாம்பிள்ளையாகவும் பணியாற்றினார்.[2]
1865 ஆம் ஆண்டில் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அக்கல்லூரியில் உ. வே. சாமிநாதையருக்கு தமிழாசிரியர் பணியைப் பெற்றுத் தந்தார். பனைவோலை எழுதுவதிலும் இலக்கணத்தைக் கற்பிப்பதிலும் விற்பனராகத் திகழ்ந்தார். 1888 ஆம் ஆண்டில் மறைந்தார். [3]
மறைவு
[தொகு]சி. தியாகராச செட்டியார் 1888 சனவரி 19 ஆம் நாளில் இயற்கை எய்தினார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]இவருடைய வாழ்க்கை வரலாற்றை வித்துவான் தியாகராச செட்டியார் என்னும் தலைப்பில் உ. வே. சாமிநாதையர் நூலாக எழுதியுள்ளார்.[4]
இயற்றிய நூல்கள்
[தொகு]சான்றடைவு
[தொகு]- ↑ http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/article5848180.ece?ref=archive
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-27. Retrieved 2015-07-03.
- ↑ வைத்தியநாதன் கே, தினமணி செம்மொழிக்கோவை 2010, சென்னை, பக்.274
- ↑ வித்துவான் தியாகராச செட்டியார்
- ↑ பூவாளூர் புராணம்
- ↑ வித்துவான் தியாகராச செட்டியார் இயற்றிய திருச்செந்தில்மாலை