சிவப்பு மேர்க்குரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்பு மேர்க்குரி
உற்பத்தியான நாடுஆசுத்திரியா
உற்பத்தியான தேதி1856 (1856)
எப்படி அருமைகுறைவாகவே உள்ளன
இருப்பு எண்ணிக்கைதெரியவில்லை
முகப் பெறுமானம்6kr - 30 centesimi
மதிப்பீடுஐ.அ. $40,000

சிவப்பு மேர்க்குரி (Red Mercury) என்பது, மிகவும் அரிதாகக் கிடைக்கும் ஆசுத்திரிய செய்தித்தாள் அஞ்சல்தலை ஆகும். இது செய்தித்தாள்களை ஆசுத்திரியா, இலம்பார்டி-வெனீசியா ஆகிய பகுதிகளில் அஞ்சலில் அனுப்புவதற்காக வெளியிடப்பட்டது.[1]

வரலாறு[தொகு]

ஆசுத்திரியாவின் செய்தித்தாள் அஞ்சல்தலைகள் முதன்முதலாக 1851ல் வெளியாகின. இவ்வஞ்சல்தலைகளில் உரோம தூதுக் கடவுளான மேர்க்குரியின் படம் இடம்பெற்றிருந்தது. இதில் பெறுமதி அச்சிடப்படவில்லை. ஆனால், இதன் நிறம் அதன் பெறுமதியைக் குறித்தது. நீலநிறம் ஒரு செய்தித்தாளுக்கான கட்டணமான 6/10 கிரெயுசெரையும், மஞ்சள் 10 செய்தித்தாள்களுக்கான கட்டணமான 6 கிரெயுசெரையும், இளஞ்சிவப்பு 50 செய்தித்தாள்களுக்கான அஞ்சல் கட்டணமான 30 கிரெயுசெரையும் குறித்தது. கூடுதல் கட்டணங்கள் முத்திரையிடப்பட்ட செய்தித்தாள் கட்டுகளுக்கான சுற்றுத்தாள்கள் பொதுவாக கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.[2]

சான்றுகளும் மூலங்களும்[தொகு]

சான்றுகள்
  1. Österreich 1850-1918, Spezialkatalog und Handbuch, von Dr. Ulrich FERCHENBAUER, Wien 1981, p.107
  2. L.N. Williams (1993). Encyclopedia of Rare and Famous Stamps, Volume 1. The Stories. Geneva: David Feldman SA. பக். 1,2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-89192-435-3 இம் மூலத்தில் இருந்து 2014-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140316195615/http://www.davidfeldman.com/shop/encyclopedia-of-rare-and-famous-stamps-by-l-n-williams-volume-1-the-stories.html. பார்த்த நாள்: 2015-09-08. 
மூலங்கள்
  • Philatelic Gems 1 (Linn's, 1989)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_மேர்க்குரி&oldid=3610808" இலிருந்து மீள்விக்கப்பட்டது