சிவப்புக் காடு
Appearance
சிவப்புக் காடு (Red Forest, ரஷ்ய மொழி: Рыжий лес), எனப்படுவது உக்ரைன் நாட்டில் செர்னோபில் அணு உலையைச் சுற்றியுள்ள 10 ச.கி.மீ பரப்பளவில் உள்ள காட்டு மரப்பகுதியைக் குறிக்கும். ஏப்ரல் 26, 1986-ஆம் ஆண்டு செர்னோபில் உலையில் ஏற்பட்ட அணுக்கசிவின் காரணமாக இக்காட்டில் உள்ள ஊசியிலை மரங்கள் அனைத்தும் மிகுந்த கதிர்வீச்சுக்கு உட்பட்டு இறந்ததன் விளைவாக இவை செந்நிறமாக மாறின[1]. இதனாலேயே இது சிவப்புக் காடு என அழைக்கப்படுகிறது. உலகின் மிகுந்த மாசுபட்ட பகுதிகளில் இது ஒன்றாகும்[2].