சிவனார் வேம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவனார் வேம்பு

சிவனார் வேம்பு (Indigofera aspalathoides) என்பது பபேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மூலிகைத் தாவரம் ஆகும்.[1]

பெயர்[தொகு]

சிவனார் வேம்பானது காந்தாரி, அன்னெரிஞ்சான் பூண்டு, இறைவன வேம்பு ஆகிய வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இந்தத் தாவரத்தைப் பறித்து உலர்த்தாமல் அன்றே எரித்தாலும் புகையைக் கக்கும் மூலிகை என்ற காரணமாக இதை ‘அன்று எரிந்தான் பூண்டு’ என்று அழைத்துள்ளனர். அது மருவி ‘அன்னெரிஞ்சான் பூண்டு’ ஆகிவிட்டது.[2]

விளக்கம்[தொகு]

இது செம்மண் பகுதிகளில் செழித்து வளரும் ஒரு குறுஞ்செடியாகும்.[3] இதன் செவ்விய நிறத் தண்டில் வெள்ளி படர்ந்ததைப் போன்ற ரோம வளரிகள் காணப்படும். மேலும் மிகச் சிறிய அளவிலான முட்டை வடிவ இலைகளைக் கொண்டதாகவும், ஊதா நிறம் கலந்த சிவந்த இதழ்களைக் கொண்ட மலர்கள் பூப்பதாகவும் இது இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. டாக்டர் வி.விக்ரம் குமார் (23 மார்ச் 2019). "சருமம் காக்கும் சிவனார் வேம்பு". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 27 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "சிவனார் வேம்பு!". கட்டுரை. vivasayam.org. 10 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 27 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சரும வியாதியை போக்கி, ஆயுளை அதிகமாக்கும் சிவனார் வேம்பு மூலிகையின் அற்புதம் Read more at: https://tamil.boldsky.com/health/herbs/2017/an-ayurvedic-treatment-skin-diseases-using-this-herb-indigof-018207.html". கட்டுரை. tamil.boldsky.com. 17 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 27 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவனார்_வேம்பு&oldid=3577232" இலிருந்து மீள்விக்கப்பட்டது