சிவசக்தி புள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவசக்தி புள்ளி (Shivshakti Point) நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு 'சிவசக்தி புள்ளி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் தரையிறங்கி வெற்றிகரமாகத் தரையிறங்கிய நிலாவின் தென் துருவத்தில் 69.367621°தெற்கு 32.348126°கிழக்கு என்ற ஆயத்தொகுதிகளில் இப்புள்ளி உள்ளது.[1]

சந்திராயனின் விக்ரம் தரையிறங்கி நிலவில் தென் துருவத்தில் தரையிறங்கும் நிகழ்வின் போது தென் ஆப்பிரிக்காவில் பிரிக்சு மாநாட்டில் இருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பியவுடன் பெங்களுரில் இசுரோவிற்கு வருகை தந்தார். பெங்களுருவிலுள்ள இசுரோ தொலையளவியல் கண்காணிப்பு மற்றும் கட்டளை வலைப்பிணையத் தலைமையகத்தில் 2023 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 26 ஆம் தேதியன்று நிலவில் மன்சினசு சி மற்றும் சிம்பீலியசு என் பள்ளங்களுக்கு[2] இடையே அமைந்துள்ள இப்பகுதிக்கு சிவசக்தி புள்ளி என்று பெயர் சூட்டினார்.[3]

நிகழ்வின்போது விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, சந்திரயான்-3 வெற்றிகரமாக தரை இறங்கியதை குறிக்கும் வகையில் ஆகத்து மாதம் 23-ஆம் தேதியை தேசிய விண்வெளி தினமாக இந்தியா கொண்டாடும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். தொடர்ந்து பேசுகையில் சந்திராயன்-2 திட்டத்தை சுட்டிக் காட்டிய பிரதமர் அதன் கால்தடங்களைப் பதித்த நிலாவின் மேற்பரப்பிலுள்ள இடத்தை மூவர்ணம் என்ற பொருளை குறிக்கும் வகையில் 'திரங்கா' என்ற பெயராலும் அழைத்தார்.[4]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mission homepage". Archived from the original on 23 June 2023. பார்க்கப்பட்ட நாள் 29 June 2023.
  2. "India launches Chandrayaan-3 mission to the lunar surface". Physicsworld. 14 July 2023. Archived from the original on 17 July 2023. பார்க்கப்பட்ட நாள் 15 July 2023.
  3. "Modi in Bengaluru Live Updates: Touchdown point of Vikram lander will be known as 'Shivshakti', says PM". The Indian Express (in ஆங்கிலம்). 2023-08-25. பார்க்கப்பட்ட நாள் 2023-08-26.
  4. "`சிவசக்தி’, 'திரங்கா' - நிலவில் சந்திரயான் தொட்ட இடங்களுக்கு பெயர்வைத்த பிரதமர் மோடி". ஆனந்த விகடன். https://www.vikatan.com/government-and-politics/politics/modi-names-chandrayaan-landed-points-in-moon. பார்த்த நாள்: 26 August 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவசக்தி_புள்ளி&oldid=3788852" இலிருந்து மீள்விக்கப்பட்டது