சில்வியா ஏர்லி
சில்வியா ஏர்லி | |
---|---|
பிறப்பு | சில்வியா ஆனே ரீட் ஆகத்து 30, 1935 கிப்ஸ்டன், நியூ ஜெர்சி, ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்க ஐக்கிய நாடு |
துறை | கடலியல் |
பணியிடங்கள் | தேசியக் கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம், தேசிய புவியியல் கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | |
விருதுகள் |
|
துணைவர் |
|
பிள்ளைகள் | எலிசபெத் டெய்லர் (1961), ஜான் ரிச்சீ டெய்லர், கேல் மீட் (1968) |
சில்வியா ஆலிஸ் ஏர்லி (Sylvia Alice Earle அறிவியல் முனைவர், இயற்பெயர் நீ ரீடி,பிறப்பு- ஆகஸ்ட் 30, 1935): ஓர் அமெரிக்க கடல் உயிரியலாளரும் நாடுகான் பயணரும், எழுத்தாளரும் விரிவுரையாளரும் ஆவார். தேசிய புவியியல் கழகத்தின் உறைவிட - ஆய்வுப்பணியாளராக 1998 வரை பணியாற்றியவர்.[1][2] ஐக்கிய அமெரிக்க தேசியக் கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் முதல் பெண் தலைமை விஞ்ஞானி ஆவார்.[2] டைம் (இதழ்) இவருக்கு 1998 ஆம் ஆண்டில் ‘புவிக்கோளின் முதல் நாயகன்’ என்ற பெயரை வழங்கியது.[1] கடலையும், கடல்வாழ் விலங்குகளையும் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட குழுவான ஓசோன் எல்டர்ஸின் ஒரு பகுதியாகவும் அவர் விளங்குகிறார்.
இளமையும் கல்வியும்
[தொகு]ஏர்லி, 1935 ஆம் ஆண்டு நியூஜெர்சியில் உள்ல கிப்ஸ்டவுனில் பிறந்தார். இது நியூஜெர்சியிலுள்ள கிரீன்விச் நகராகும். இவருடைய பெற்றோர் லூயிஸ் ரீட் மற்றும் ஆலிஸ் ஃபிரீஸ் ஏர்லி ஆவார்கள். பெற்றோர்கள் இருவருமே தனது மகளின் இயற்கை ஆர்வத்தை ஊக்குவித்து வந்தனர். அதற்காக அவர்கள் மகளுடன் ஆர்வமாக வெளியிடங்களுக்குச் சென்று இயற்கையை ரசிப்பவர்களாக இருந்தனர்.[3] ஏர்லி குழந்தையாக இருக்கும்பொழுதே அவருடைய குடும்பம் புளோரிடாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிக்குக் குடிபெயர்ந்தனர்.[4]
ஏர்லி 1952 இல் புனித பீட்டர்ஸ்பர்க் கல்லூரியில் அசோசியேட் பட்டத்தையும், 1955 இல் புளோரிடா மாநிலப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டத்தையும், 1956 இல் டியூக் பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியல் பட்டம் மற்றும் கடல்சார் தாவரங்கள், பூஞ்சைகள் பற்றி ஆய்ந்து முனைவர் பட்டமும் பெற்றார்.
பணி
[தொகு]ஏர்லி கலிபோர்னிய அறிவியல் அகாதமியின் கடசார் உயிரின அருங்காட்சியகத்தின் மேற்பார்வையாளராக 1979-1986 வரை பணியாற்றினார். 1969-1981 வரை பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் துணை ஆய்வாளராக இருந்தார். 1967-1969 வரை ரெட்க்ளிப் நிறுவனத்தின் அறிஞராகவும் 1967-1981 இல் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளராகவும் இருந்தார்.
1966 இல் முனைவர் பட்டம் பெற்ற பின்னர் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் ஓராண்டுகள் ஆய்வாளராகப் பணியாற்றினார். பின்னர் புளோரிடா திரும்பி கேப் ஹேஸ் கடல்சார் ஆய்வகத்தில் இயங்குநராகத் தங்கி இருந்தார்,[5] 1969 இல் தெக்டிடீ-I திட்டத்தில் இணைந்து பணியாற்ற விண்ணப்பித்தார். கன்னித் தீவுகள் கடலோரப்பகுதியில் தங்கியிருந்து கடலின் ஐம்பது அடி ஆழத்தில் நீர்மூழ்கியில் பல வாரங்கள் தங்கியிருந்து ஆய்வுகள் செய்யவேண்டிய பணி இது. கடலடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வுகளை ஏர்லி செய்திருந்தபோதும் இத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டார். ஆனால் அடுத்த ஆண்டே இவர் தெக்டிடீ-II திட்டத்தில் கடல்சார் பெண் ஆய்வாளர்கள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவ்வாறு நியமிக்கப்பட்ட முதல் பெண் குழுத்தலைவர் ஏர்லி ஆவார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Rosenblatt, Roger (October 5, 1998). "Sylvia Earle: Call Of The Sea". Time இம் மூலத்தில் இருந்து டிசம்பர் 24, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071224184634/http://www.time.com/time/magazine/article/0,9171,989255,00.html. பார்த்த நாள்: December 16, 2011.
- ↑ 2.0 2.1 "Sylvia Earle, Oceanographer Information, Facts, News, Photos". National Geographic. பார்க்கப்பட்ட நாள் February 12, 2011.
- ↑ Holloway, Marguerite (ஏப்ரல் 1992). "Fire in Water" (in en). Scientific American 266 (4): 37–40. doi:10.1038/scientificamerican0492-37. http://www.nature.com/scientificamerican/journal/v266/n4/full/scientificamerican0492-37.html.
- ↑ "Sylvia A. Earle." Encyclopedia of World Biography. Detroit: Gale, 1998. Biography in Context. Web. 14 Jan. 2016.
- ↑ "Sylvia A. Earle, Ph.D.". Academy of Underwater Arts and Sciences இம் மூலத்தில் இருந்து நவம்பர் 20, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081120081554/http://www.auas-nogi.org/bio_earle_sylvia.html. பார்த்த நாள்: March 18, 2014.
- ↑ Collette, BB (1996). "Results of the Tektite Program: Ecology of coral-reef fishes.". In: MA Lang, CC Baldwin (Eds.) The Diving for Science…1996, "Methods and Techniques of Underwater Research" Proceedings of the American Academy of Underwater Sciences Sixteenth Annual Scientific Diving Symposium, Smithsonian Institution, Washington, DC.. http://archive.rubicon-foundation.org/4687. பார்த்த நாள்: 2013-04-14.