சில்பரி மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
சுடோன்யென்ச்சு, ஆவ்பரி மற்றும் இணைந்த தளங்கள்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைகலாச்சாரம்
ஒப்பளவுi, ii, iii
உசாத்துணை373
UNESCO regionஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1986 (10th தொடர்)

சில்பரி மலை (Silbury Hill) என்பது தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள வைல்ட்சையர் மாகாணத்திற்கு அருகில் உள்ள ஆவ்பரி கிராமத்தில் அமைந்துள்ள செயற்கை சுண்ணாம்பு மலைகள் ஆகும். சுடோன்யென்ச்சு எனப்படும் கல்வட்ட தொல்பொருட் சின்னம். ஆவ்பரி மற்றும் அவற்றுடன் இணைந்த தளங்கள் என்ற யுனெசுகோ உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதி சில்பரி மலையாகும். புவியியல் பகுதிகளைக் குறிப்பிட பிரித்தானியவில் பயன்படுத்தப்படும் பிரித்தானிய தேசிய குறிப்புக் கட்டத்தில் இம்மலைக்கு எசுயு099685 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. 39.3 மீட்டர் (129 அடி) உயரம் கொண்ட இம்மலை [1] வரலாற்றுக்கு முந்தைய மனிதர்களால் ஐரோப்பாவில் உருவாக்கப்பட்ட உலகின் மிக உயர்ந்ததும் மிகப்பெரியதுமான மலையாகும்.

கிசா நெக்ரோபோலிசுவின் சிறிய எகிப்திய பிரமிடுகள் சிலவற்றின் அளவை சில்பரி மலையின் அளவு ஒத்திருக்கிறது [2]. ஆவ்பரி கிராமத்தைச் சுற்றியுள்ள புதியகற்கால நினைவுச் சின்னத்தொகுதியின் ஒரு பகுதியே சில்பரி மலையாகும். ஆவ்பரி வளையமும், மேற்கு கென்னத்தின் நீண்ட வட்டவடிவத் திட்டுகளும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள பிற பாரம்பரிய சின்னங்களாகும். இந்த நினைவுச் சின்னங்கள் கட்டப்பட்டதற்கான காரணம் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை. சொல்லப்படும் சில காரணங்களும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தில் அமைந்திருக்கும் ஆச்சரியமான இவ்வட்டவடிவ நினைவுச்சின்னங்கள் கலாச்சார ரீதியாகவோ அல்லது செயற்கையாகவோ ஆவ்பரி மற்றும் சில்பரியுடன் தொடர்பு கொண்டுள்ளன.

அமைப்பு[தொகு]

சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட சுண்ணாம்பு மற்றும் களிமண் ஆகியவற்றை கொண்டு இம்மலை கட்டப்பட்டுள்ளது. சுமார் 40 மீட்டர் (131 அடி) உயரம் கொண்டும், சுமார் 5 ஏக்கர் (2 எக்டேர்) பரப்பளவைக் கொண்டும் இம்மலை உயர்ந்து நிற்கிறது. கி.மு 2400 முதல் 2300 வரையிலான காலகட்டத்தில் பல நிலைகளாக இம்மலை கட்டப்பட்டுள்ளது. கைதேர்ந்த கட்டிடக்கலை வல்லுநர்கள் சேர்ந்து உருவாக்கியது போல இம்மலை காட்சியளிக்கிறது. ஏராளமான மனித உழைப்பும் மூலப்பொருட்களும் செலவழித்து இம்மலை கட்டப்பட்டதாகவும் அறியப்படுகிறது.

500 ஆண்கள் 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து உழைப்பதற்குச் சமமான 18 மில்லியன் மணித உழைப்பு நேரம் செலவிடப்பட்டு இம்மலை கட்டப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையினர் கணக்கிட்டுள்ளனர்,. 248000 கன மீட்டர் அளவுக்கு பூமியைத் தோண்டி, நிரப்பி, வடிவமைக்கப்பட்டு இம்மலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். எந்தப்பதிவுகளும் இல்லாத புதியகற்கால பழங்குடியினரின் கடைசிக் காலகட்டத்தில், எளிய நினைவுச்சின்னங்கள் எதுவும் இல்லாமல் சில்பரி மலை மற்றும் இதைப்போன்ற திட்டங்கள் மட்டுமே நிலைத்திருப்பதாக யுவான் டபிள்யூ மேக்கி உறுதியாகத் தெரிவிக்கிறார். இம்முடிவுகள் மூலம் தெற்கு பிரித்தானியா முழுவதும் கட்டுப்பாட்டுடன் விளங்கிய ஒரு பரந்து விரிந்த சமூகம் இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கை உருவாகிறது [3]. மலையின் அடிப்பகுதி 167 மீட்டர் (548 அடி) விட்டம் கொண்ட ஒரு வட்டவடிவம் ஆகும். இதன் மேல்பகுதி 30 மீட்டர் விட்டம் கொண்ட சமமட்ட உச்சியாகும். முதலில் ஒரு சிறிய மண்மேடு கட்டப்பட்டு பின்னர் இரண்டாவது கட்டத்தில் அது விரிவுபடுத்தப்பட்டிருக்கலாம். மலையின் அடிவாரத்தில் உள்ள பூர்வாங்க கட்டமைப்பு மிகச்சரியான ஒரு வட்டமாக உள்ளது. சமமட்ட உச்சியின் மையமும், கூம்பின் மையமும் ஒன்றுக்குள் ஒன்றாய் ஒரு மீட்டருக்குள் அமையுமாறு மலை அமைந்துள்ளதை அளவையியல் அளவீடுகள் தெரிவிக்கின்றன. முதன்முதலில் உருவாக்கப்பட்டபோது உச்சி வளைவாக காணப்பட்டதாகவும் பின்னர் இடைக்காலத்தில் இது தற்காப்புக்காக கட்டிடம் கட்டப்படுவதற்காக தட்டையாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது [4].

மேற்கோள்கள்[தொகு]

  1. "English Heritage Ancient Monument Listing". English Heritage.
  2. Malone (1989), p. 95.
  3. Mackie, Science and Society in Prehistoric Britain (New York: St. Martin's Press) 1977.
  4. Staff writer. "A brief introduction: Silbury Hill". English Heritage. பார்க்கப்பட்ட நாள் 17 May 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்பரி_மலை&oldid=2764587" இலிருந்து மீள்விக்கப்பட்டது