உள்ளடக்கத்துக்குச் செல்

சிலுகுல்ரி வீரபத்ரராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலுகுல்ரி வீரபத்ர ராவ்
ChilukuriVeerabhadrao
பிறப்பு17 அக்டோபர் 1872
ரிலாங்கி, மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்.
இறப்பு1939
பணிவரலாற்று ஆசிரியர்

சிலுகுல்ரி வீரபத்ரராவ் (ChilukulriVeerabhadraRao) ஓர் இந்திய வரலாற்றாசிரியராவார்.

ராவ் 1872 ஆம் ஆண்டு இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தின் ரிலாங்கி கிராமத்தில் பிறந்தார். தேசோபகாரி, ஆந்திர தேசாபிமானி, விபூதரஞ்சனி, ஆந்திர கேசர், சத்யவாதி உள்ளிட்ட பல பத்திரிகைகளில் இவர் பணியாற்றினார். 1909-1912 ஆம் ஆண்டுகள் காலப்பகுதியில் ராவ் சென்னையில் வசித்து வந்தார். அப்போது ஆந்திராவின் வரலாற்றை ஐந்து தொகுதிகளாக எழுதினார். இதுவே முதலாவதாக எழுதப்பட்ட ஆந்திர வரலாறாகும். ஆந்திர மகாசபா இவரது பங்களிப்பை "சதுரானா" வரலாற்றை உருவாக்கியவர் என்று பொருள் கொண்ட "சதுரானா" என்ற தலைப்பில் அங்கீகரித்தது.

சிலுகுல்ரி வீரபத்ர ராவ் 1939 ஆம் ஆண்டு இறந்தார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. From "naavaajnmayamitrulu," KameswarraraoTekumalla

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலுகுல்ரி_வீரபத்ரராவ்&oldid=3148053" இலிருந்து மீள்விக்கப்பட்டது