சிலிக்கேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிலிக்கேட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிலிக்கேட் (SiO44-) என்பது, சிலிக்கனை அடிப்படையாகக் கொண்ட எதிரயனியைக் கொண்டுள்ள ஒரு சேர்வை. மிகப் பெரும்பாலான சிலிக்கேட்டுகள் ஆக்ஸைடுகள் ஆகும். ஆனாலும், எக்சோபுளோரோசிலிக்கேட்டு ([SiF6]2−) போன்ற ஆக்சிஜனை கொண்டிராத சேர்வைகளும் இது போன்ற பிற சேர்வைகளும் இதற்குள் அடங்குகின்றன. இந்தக் கட்டுரை முதன்மையாக Si-O எதிரயனிகள் பற்றியே ஆராய்கிறது. புவியினதும், புவியைப் போன்ற பிற கோள்களினதும் மேலோடுகள், பாறைகளைக் கொண்ட நிலாக்கள், விண்கற்கள் என்பவற்றின் பெரும் பகுதி சிலிக்கேட்டுகளால் ஆனது. மணல், போட்லாந்துச் சிமெந்து மற்றும் பல வகையான கனிமங்கள் சிலிக்கேட்டுகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலிக்கேட்டு&oldid=2116065" இருந்து மீள்விக்கப்பட்டது